/

பகுதி - 712

ஞானம் பெறவேண்டும்

News image
Updated On :10 டிசம்பர் 2017, 6:30 pm

ஞானம் பெறவேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் திருவானைக்காவுக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  தொங்கல் சீரை ஒழித்து மற்ற எல்லாச் சீர்களும் ஒரு நெடிலோடு தொடங்கும் இரண்டெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும் கொண்டவை.


தானத் தானத் தனதான

நாடித் தேடித்  தொழுவார்பால் 
      நானத் தாகத் திரிவேனோ  

மாடக் கூடற் பதிஞான 
      வாழ்வைச் சேரத்  தருவாயே

பாடற் காதற்  புரிவோனே
      பாலைத் தேனொத் தருள்வோனே     

ஆடற் றோகைக் கினியோனே
      ஆனைக்  காவிற் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.