பதச் சேதம் | சொற் பொருள் |
நாடி தேடி தொழுவார் பால்
| |
நான் நத்து ஆக திரிவேனோ
| நத்து ஆக: நத்துதலாக, |
மாட கூடல் பதி ஞான
| கூடற்பதி: மதுரை—இதை |
வாழ்வை சேர தருவாயே
|
|
பாடல் காதல் புரிவோனே
|
|
பாலை தேன் ஒத்து அருள்வோனே
|
|
ஆடல் தோகைக்கு இனியோனே
| ஆடல் தோகைக்கு: மயிலுக்கு— |
ஆனைக் காவில் பெருமாளே.
|
|
நாடித் தேடித் தொழுவார்பால்... உன்னை நாடிவந்து தொழுகின்ற அன்பர்களிடத்திலே,
நான் நத்தாகத் திரிவேனோ... நான் விருப்பம்கொண்டு திரியமாட்டேனா?
மாடக் கூடற் பதி... மாடங்கள் நிறைந்த கூடல் நகரம் எனப்படும் (துவாதசாந்தத் தலமாகிய) மதுரையாகிய யோகஸ்தானத்தில்*
(விளக்கத்தைக் கீழே காண்க)
ஞான வாழ்வைச் சேர தருவாயே... ஞானவாழ்வைப் பெறும்படியாக அருள்புரியவேண்டும்.
பாடற் காதற் புரிவோனே... தமிழ்ப் பாடல்களை விரும்பிக் கேட்பவனே!
பாலைத் தேனொத்து அருள்வோனே... பாலையும் தேனையும் ஒத்த இனிமையான அருளைத் தருபவனே!
ஆடற் றோகைக்கு இனியோனே... ஆடும் மயில்போன்றவரான வள்ளிக்கு இனியவனே!
ஆனைக் காவிற் பெருமாளே.... திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே!
*துவாதசாந்ததத் தலம். மதுரை துவாதசாந்தத் தலம் என்று அழைக்கப்படுவது.
தன்பெருந் தன்மையை யுணர்ந்திலை கொல் சிவாராச
தானியாய்ச் சீவன்முத்தித்
தலமுமாய்த் துவாதசாந் தத்தலமு மானதித்
தலமித் தலத்து…
என்று மீனாட்சியம்மன் பிள்ளைத் தமிழ், அம்புலிப் பருவம், பாடல் ஆறில் சொல்லப்படுகிறது. இப்படிப் பல இடங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. துவாதசாந்தம் என்பது தலை உச்சிக்கு மேலே பன்னிரண்டு அங்குல உயரத்தில் உள்ள யோகஸ்தானம். மதுரை அத்தகைய தலம். அந்த நிலையில் ஞானத்தை அடையவேண்டும் என்று கோருகிறார்.
சுருக்க உரை:
பாலையும் தேனையும் ஒத்த இனிய அருளை வழங்குபவனே! ஆடும் மயில்போன்ற வள்ளிக்கு இனியவனே! உன்னை நாடி வழிபடுகின்ற அடியாரிடத்திலே நான் விருப்பம் கொண்டவனாக இருக்க வேண்டும். கூடற்பதியான மதுரையாகிய துவாதசாந்த யோக நிலையில் பெறுகின்ற ஞான வாழ்வை அடியேனுக்குத் தந்தருளவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


