‘உன்னுடைய திருவடியே எனக்கு உற்ற உறவாகச் சேர்த்து வைக்கின்ற ஒப்பற்ற வரத்தைத் தரவேண்டும்’ என்று வேண்டும் இந்தப் பாடல் நாகப்பட்டினத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளை உடைய பாடல். ஒவ்வொரு சீரிலும் மூன்று மூன்று எழுத்துகள்; ஒவ்வொரு மூன்றாவது எழுத்தும் நெடில். ஓரிரு இடையொற்றுகளைத் தவிர்த்து, வல்லின மெல்லின ஒற்றுகள் பாடல் முழுவதிலும் எங்குமே பயிலவில்லை என்பது நோக்கத்தக்கது.
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா தனதான
விழுதா தெனவே கருதா துடலை
வினைசேர் வதுவே புரிதாக
விருதா வினிலே யுலகா யதமே
லிடவே மடவார் மயலாலே
அழுதா கெடவே அவமா கிடநா
ளடைவே கழியா துனையோதி
அலர்தா ளடியே னுறவாய் மருவோ
ரழியா வரமே தருவாயே
தொழுதார் வினைவே ரடியோ டறவே
துகள்தீர் பரமே தருதேவா
சுரர்பூ பதியே கருணா லயனே
சுகிர்தா வடியார் பெருவாழ்வே
எழுதா மறைமா முடிவே வடிவே
லிறைவா எனையா ளுடையோனே
இறைவா எதுதா வதுதா தனையே
இணைநா கையில்வாழ் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

