இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பகுதி - 490

வடதிருமுல்லைவாயில் தலத்துக்கான பாடலிது

Updated On :27 பிப்ரவரி 2017, 6:30 pm

சென்னை ஆவடிக்கு அருகேயுள்ள வடதிருமுல்லைவாயில் தலத்துக்கான பாடலிது.  மண், பெண், பொன்னாசைகளை ஒழிப்பதற்கான அறிவை வலியத் தந்து ஆண்டுகொள்ள வேண்டும் என்று இது வேண்டுகிறது.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல்; இதில் 1, 4, 7 ஆகிய சீர்கள் (ஒற்றொழித்து) நான்கெழுத்துகளைக் கொண்டவை; இவற்றில் (கணக்கில் வராத) நான்காமெழுத்து இடையின ஒற்க அமைந்துள்ளது; 2, 3, 5, 6, 8, 9 ஆகிய சீர்கள் மும்மூன்று எழுத்துகளை உடையவை. 

தனதைய தானன தானன
      தனதைய தானன தானன
      தனதைய தானன தானன                 தனதான

அணிசெவ்வி யார்திரை சூழ்புவி
         தனநிவ்வி யேகரை யேறிட
         அறிவில்லி யாமடி யேனிட             ரதுதீர
      அருள்வல்லை யோநெடு நாளின
         மருளில்லி லேயிடு மோவுன
         தருளில்லை யோஇன மானவை     -  யறியேனே
குணவில்ல தாமக மேரினை
         யணிசெல்வி யாயரு ணாசல
         குருவல்ல மாதவ மேபெறு   -      குணசாத
      குடிலில்ல மேதரு நாளெது
         மொழிநல்ல யோகவ ரேபணி
         குணவல்ல வாசிவ னேசிவ     -    குருநாதா
பணிகொள்ளி மாகண பூதமொ
         டமர்கள்ளி கானக நாடக
         பரமெல்லி யார்பர மேசுரி      -       தருகோவே
      படரல்லி மாமலர் பாணம
         துடைவில்லி மாமத னாரனை
         பரிசெல்வி யார்மரு காசுர    -      முருகேசா
மணமொல்லை யாகிந காகன
         தனவல்லி மோகன மோடமர்
         மகிழ்தில்லை மாநட மாடின  -      ரருள்பாலா
      மருமல்லி மாவன நீடிய
         பொழில்மெல்லி காவன மாடமை
         வடமுல்லை வாயிலின் மேவிய   -   பெருமாளே.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.