பதச் சேதம் | சொற் பொருள் |
மெய் சார்வு அற்றே பொய் சார்வு உற்றே நிச்சம் ஆர் துற்ப பவ வேலை
| சார்வு: சார்பு, சார்ந்திருத்தல்; மெய்ச்சார்வு: சார்ந்திருக்க மெய்யான துணை, பற்றுக்கோடு, ஆதாரம்; பொய்ச்சார்வு: பொய்யானை துணை; நிச்சார்: நிச்சம் ஆர்—நிச்சம்: நிச்சயமாய், எப்போதும்; ஆர்: நிறைந்த; துற்ப: துன்ப (வலித்தல் விகாரம்); பவவேலை: பிறவிக் கடல்; |
விட்டு ஏறிப் போக ஒட்டாமல் தே(னு)ம் மட்டே அ தத்தையர் மேலே
| தேனும் மட்டே: தேனும் குறைவானதே (எனத்தக்க சொல்லை உடைய); தத்தையர்: கிளிபோன்ற பெண்கள்; |
பிச்சாய் உச்சாகி போர் எய்த்தார் பத்தார் வில் பொன் கழல் பேணி
| பிச்சாய்: பித்து ஆகி; உச்சாகி: உச்சத்தை அடைந்து, முற்றிப் போய்; போர் எய்த்தார்: கலவிப் போரில் இளைத்தவர்கள்; பத்தார்: பக்தர்களுடைய; வில்: ஒளிபொருந்திய (வில்லிடும் என்றால் மின்னுகின்ற என்று பொருள்); |
பின் பால் பட்டே நல் பால் பெற்றார் முன் பாலை கற்பகமே தான்
| பின்: பின்னர்; பால்பட்டே: வழிக்கு வந்து; நற்பால் பெற்றார்: நல்ல வழியை, ஒழுக்கத்தை அடையப் பெற்றவர்கள்; பாலைக் கற்பகமே: பாலைவனத்தில் நிழல்கொடுக்கும் கற்பக மரம்; |
செம் சாலி சாலத்து ஏறி சேல் உற்று ஆணித்து பொழில் ஏறும்
| செச்சாலி: செம் சாலி—செம்மையான சாலி; சாலி: நெற்கதிர்; சாலத்து: கூட்டத்தில்; சேல் உற்று; மீன் அடைந்து; ஆணித்து: அணித்து, அண்மையிலுள்ள; பொழிலேறும்: சோலையை அடையும்; |
செம் கோடை கோடுக்கே நிற்பாய் நித்தா செக்கர் கதிர் ஏனல்
| செக்கோடக் கோடு: செங்கோடு ஆகிய மலை (திருச்செங்கோட்டு மலை); செக்கர் கதிர்: சிவந்த கதிர்களை உடைய; ஏனல்: தினை(யும்); |
முச் சாலி சாலி தாள் வெற்பாள் முத்து ஆர் வெட்சி புய வேளே
| முச்சாலி: மூன்று போகம்; சாலித் தாள்: நெல்லுடைய அடித் தண்டு; வெற்பாள்: மலையைச் சேர்ந்தவள்(ஆன வள்ளி); முத்து ஆர்: முத்து மாலைகள் நிறைந்த; வெட்சி: வெட்சிப் பூ; |
முத்தா முத் தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே.
| முத்தா: முத்தைப் போன்றவனே; முத்தீ அத்தா: மூன்று தீக்களைக் கொண்டு வளர்க்கும் வேள்விகளின் தலைவனே; சுத்தா: பரிசுத்தனே; முத்தா: முத்தி நிலையில் உள்ளவனே; முத்திப் பெருமாளே: முக்தியை அளிக்கின்ற பெருமாளே; |
மெய்ச் சார்வு அற்றே பொய்ச் சார்வு உற்றே... உண்மையான பற்றுகோட்டை கைவிட்டுவிட்டும்; பொய்யான துணைகளைப் பற்றிக்கொண்டும்;
நிச்சார் துற்பப் பவ வேலை விட்டேறிப் போக ஒட்டாமல்... எப்போதும் துன்பமே நிச்சயமாக நிறைந்ததான பிறவிக் கடலைக் கடந்து, கரையை அடைய முடியாதபடி,
தே(ன்) மட்டே அத் தத்தையர் மேலே பிச்சாய் உச்சாகிப் போர் எய்த்தார்... (இவர்களுடைய பேச்சுக்கு முன்னால்) தேனுக்கும் இனிமை குறைவு எனக்கூடிய கிளிபோன்ற பெண்களின்மேல் பித்து ஏறியும்; அந்தப் பித்து உச்சத்தை அடைந்தும்; கலவிப் போரில் இளைத்தவர்கள்,
பத்தார் விற்பொற் கழல்பேணிப் பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்முன்... அதற்குப் பிறகு உன் பக்தர்களுடைய ஒளிபொருந்திய திருவடிகளைப் போற்றி; (அந்தத் தொண்டாலே) நல்ல ஒழுக்க நிலையை அடைகின்ற சமயத்தில் அவர்களுக்கு நீ,
பாலைக் கற்பகமே தான்... பாலைவனத்திலே (குளிர்ந்த நிழலையும், விரும்பிய அனைத்தையும் தருகின்ற) கற்பகத் தருவாக நிற்கின்றாய்.
செச் சாலிச் சாலத் தேறிச் சேல் உற்று ஆணித்துப் பொழிலேறும்... செம்மையான நெற்கதிர்களின் கூட்டத்தில் ஏறுகின்ற மீன்கள் அருகிலே இருக்கின்ற சோலைகளுக்குப் போய்ச் சேருவதான,
செக்கோடைக் கோடுக்கே நிற்பாய் நித்தா... திருச்செங்கோட்டு* மலையின் உச்சியில் நிற்பவனே! நித்தியப் பொருளே!
(செங்கோடு, திருச்செங்கோடு, நாகமலை, சர்ப்ப கோத்திரம் என்று பல பெயர்களை உடையது)
செக்கர்க் கதிர் ஏனல் முச்சாலிச் சாலித் தாள் வெற்பாள் முத்து ஆர் வெட்சிப் புயவேளே... சிவந்த கதிர்களைக் கொண்ட தினையானது மூன்று போகம் விளைகின்றதும்; (பருத்த) அடித்தண்டுகளைக் கொண்ட நெற்பயிர் நிற்பதுமான வள்ளிமலைக்கு உரியவளான வள்ளியம்மை (அணியும்) முத்துமாலைகளால் நிறைந்ததும்; வெட்சிமாலையைச் சூடியதுமான தோளை உடைய வேளே!
முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.... முத்தைப் போன்றவனே! (ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி எனப்படும்) மூன்று தீயால் வளர்க்கப்படும் வேள்விகளின் தலைவனே! சுத்தனே! முக்தி நிலையில் (பற்றற்று) நிற்பவனே! முக்தியைத் தருகின்ற பெருமாளே!
சுருக்க உரை
செழிப்பான நெற்கதிரின் கூட்டத்திலே ஏறுகின்ற மீன்கள் அருகிலுள்ள சோலைகளை அடைகின்ற திருச்செங்கோட்டு மலையிலே நிற்பவனே! நித்தியப் பொருளே! மூன்று போகமும் விளைகின்ற சிவந்த கதிர்களை உடைய தினையும், செழித்த அடித்தண்டுகளை உடைய நெல்லும் நிற்கின்ற வள்ளி மலைக்கு உரியவளான வள்ளியம்மை அணிந்திருக்கும் முத்துமாலைகளும், உன்னுடைய வெட்சி மாலையும் நிறைந்திருக்கும் தோளைக் கொண்டவனே! முத்துப் போல அரியவனே! மூன்று தீயால் வளர்க்கப்படும் வேள்விகளின் தலைவனே! பரிசுத்தனே! முக்திநிலையில் பற்றற்று விளங்குபவனே! முக்தியை அளிக்கின்ற பெருமாளே!
உண்மையான பற்றுக்கோட்டை கைநழுவ விட்டுவிட்டும்; பொய்யான துணைகளைப் பற்றிக்கொண்டும்; துன்பம் என்பது நிச்சயமான பிறவிக் கடலைத் தாண்டி கரையேற முடியாதபடி,
தேனிலும் இனிய சொல் கொண்ட பெண்களிடத்திலே பித்து அடைந்து, அந்தப் பித்தம் தலைக்கேறி கலவிப் போரில் இளைத்துப் போனவர்கள், பின்னாளில் உன்னுடைய பக்தர்களின் ஒளிபொருந்திய பாதங்களைப் போற்றி அதன் காரணத்தால் நல்லொழுக்கம் பெற்றவர்களாக மாறும்போது அவர்களுக்குப் பாலைவனத்திலே குளிர்ந்த நிழலையும், வேண்டியன அனைத்தையும் தரவல்லதாகிய கற்பக விருட்சமாக நீ நிற்கிறாய். (அடியார் வேண்டுகின்ற அனைத்து வரங்களையும் தந்தருள வேண்டும்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

