மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 464

இப்பாடல் திருச்செந்தில் தலத்துக்கானது. 

Updated On :27 ஜனவரி 2017, 6:30 pm

இந்த எளிய சந்த அமைப்பைக் கொண்ட பாடல் திருச்செந்தில் தலத்துக்கானது.  ‘உன்னை என்னுளே அறிவதற்கான அன்பைத் தந்தருள்வாயாக’ என்று இறைவனை வேண்டும் பாடல்.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளை உடைய பாடல்;  தொங்கல் சீரில் பயிலும் நெடிலை ஒழித்து வேறெங்கும் நெடில் பயிலாமல் எல்லா எழுத்துகளும் குறிலாகவே உள்ள சந்தம்.  ஒவ்வொரு மூன்றாம் சீரிலும் இரண்டாம் எழுத்து மெல்லொற்று, நான்காம் எழுத்து வல்லொற்று.  இந்த வல்லொற்று, தாளத்துக்குத் திருப்புமுனையாக அமைவதைக் காணலாம். பெரும்பாலும் இடையினமும் மெல்லினமும் கலந்த நடை.

தனனதன தனன தந்தத்                   தனதானா
      தனனதன தனன தந்தத்             தனதானா

இயலிசையி லுசித வஞ்சிக்                கயர்வாகி
      இரவுபகல் மனது சிந்தித்            துழலாதே
உயர்கருணை புரியு மின்பக்                கடல்மூழ்கி
      உனையெனது ளறியு மன்பைத்      தருவாயே
மயில் தகர்க லிடைய ரந்தத்              தினைகாவல்
      வனசகுற மகளை வந்தித்           தணைவோனே
கயிலை மலை யனைய செந்திற்          பதிவாழ்வே
      கரிமுகவ னிளைய கந்தப்            பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.