மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி  - 466

இந்தப் பாடல் குன்று தோறாடலுக்கானது. 

Updated On :29 ஜனவரி 2017, 6:30 pm

எளியதும் சிறியதுமான இந்தப் பாடல் குன்றுதோறாடலுக்கானது.  குன்றுதோறாடலில் உள்ள ஐந்து பாடல்களில் மூன்றை இதற்கு முன்னால் பார்த்திருக்கிறோம்.  ‘என்னுடைய எல்லாத் துன்பங்களும் அற்றுப் போகவேண்டும்’ என்று இறைவனைக் கோருகிறது.

அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல்.   (தொங்கல் சீர் நீங்கலாக)அனைத்தும் குற்றெழுத்துகள்.  முதல் சீரின் இறுதியான நான்காம் எழுத்தும், மூன்றாம் சீரின் இடையான இரண்டாமெழுத்தும் மெல்லொற்றுகள்.  எங்கேயும் வல்லொற்று பயிலவில்லை.   பொதுவாக ‘தனனந் தனன தந்தத் தனதான’ என்று வல்லொற்றுடன் பயிலும் இடத்திலும் அது பயிலவில்லை என்பதைக் காணலாம். (க்ருபையாகி என்பதிலுள்ள க் என்ற எழுத்தும், விளையாடிப் என்பதிலுள்ள ப் என்ற எழுத்தும் தாளக் கணக்கில் அடங்காதவை.)

தனனந் தனன தந்த தனதான
      தனனந் தனன தந்த தனதான

அதிருங் கழல்ப ணிந்து                    னடியேனுன்
     அபயம் புகுவ தென்று               நிலைகாண
இதயந் தனிலி ருந்து                      க்ருபையாகி
      இடர்சங் கைகள்க லங்க             அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி                    நடமாடும்
      இறைவன் தனது பங்கி              லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து                     விளையாடிப்
      பலகுன் றிலும மர்ந்த               பெருமாளே.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.