பதச் சேதம் | சொற் பொருள் |
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார்
| பிணை: மான்; மானார்: பெண்கள்; |
கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு கதிர் முத்து முலை தைக்க அகலாதே
| நளினத்து முகை: தாமரை மொட்டு; கதிர் முத்து: ஒளியுள்ள முத்து (மாலை); |
மிடல் உற்ற கலவிக்குள் உள(ம்) நச்சி வளம் அற்று மிடி பட்டு மடி பட்டு மனம் மாழ்கி
| மிடல்: வலிமையான; நச்சி: விரும்பி; மிடிபட்டு: வறுமையுற்று; மாழ்கி: மயங்கி, கலக்கமுற்று; |
மெலிவு உற்ற தமியற்கு உ(ன்)னிரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே
| தமியற்கு: தனியனாகிய எனக்க; |
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்துடைய துட்டன் உயிர் போக
| தடையற்ற கணை: குறிதவறாத கணை; |
சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே
| சலசத்து: சலசம்—தாமரை; சலசத்து மயில்: சீதை (இந்த இடத்தில்); சக்ரதரன்: சக்கரம் ஏந்திய திருமால்; |
திடம் உற்ற கனக பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே
| கனகப் பொது: பொன்னம்பலம்; |
செழு நத்து உமிழு(ம்) முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே.
| நத்து: சங்கு; |
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார்...கடலையும்; விஷத்தையும்; அம்பையும்; மானையும்; கயல் மீனையும்; தாமரை மலரையும் ஒத்த விழிகளைக் கொண்ட பெண்களுடைய,
கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு கதிர் முத்து முலை தைக்க அகலாதே...பொற்சிமிழையும் தாமரை மொட்டையும் குன்றத்தையும் ஒத்ததும்; ஒளிவிடுகின்ற முத்து மாலையை அணிந்ததுமான மார்பகம் மனத்திலே அழுந்தப் பதிவதனால் அது மனத்தைவிட்டு அகலாமலிருந்து;
மிடல் உற்ற கலவிக்குள் உள(ம்) நச்சி வளம் அற்று மிடி பட்டு மடி பட்டு மன(ம்) மாழ்கி... ஆற்றல் மிகுந்ததான கலவியின்பத்தை மனம் விரும்பி; செல்வத்தை இழந்து; வறுமையுற்று; சோம்பலுக்கு அடிமைப்பட்டு; மனம் மயங்கி அழிந்து,
மெலிவு உற்ற தமியற்கு உ(ன்)னிரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே...இளைப்புற்ற தனியேனாகிய எனக்கு உன்னுடைய தாமரைத் திருவடிகள் இரண்டையும் அன்போடு அளிப்பதற்காக வந்தருள வேண்டும்.
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்துடைய துட்டன் உயிர் போக...அம்புகளைக் குறிதவறாமல் செலுத்தி; மணிகளும் ரத்தினங்களும் பதிக்கப்பட்ட கிரீடங்களை உடைய பத்துத் தலை துஷ்டனாகிய இராவணனுடைய உயிரைப் போக்கியவனும்;
சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே... தாமரையில் வீற்றிருக்கும் மயிலான (திருமகளாகிய) சீதையை சிறையிலிருந்து விடுவித்து வெற்றியைக் கொண்ட ராம(னாக வந்தவனும்); சக்கரத்தை ஏந்தியவனுமான திருமாலுடைய மருகனே!
திடம் உற்ற கனகப் பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே... உறுதியைத் தருவதான பொன்னம்பலதித்தில் (பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்றோர் மீது) அன்போடு நடனமாடிய சிவபெருமானுக்கு, விழிகளை ஒத்த புதல்வனே!
செழு நத்து உமிழு(ம்) முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே....செழுமையான சங்குகள் ஈன்ற முத்துகள் வயல்களிலெல்லாம் நிறைந்திருக்கின்ற எட்டிக்குடியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
மாணிக்கமும் வைரமும் பதிக்கபெற்ற பத்துக் கிரீடங்களை உடைய துஷ்டனால இராவணனை குறிதவறாத அம்புகளால் மாய்த்தவனும்; சீதையாக வந்த; தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளை சிறையிலிருந்து விடுவித்தவனும்; சக்கரப் படையை ஏந்தியவனுமான திருமால் மருகனே! ஆன்மாவுக்கு உறுதியளிப்பதான பொன்னம்பலத்தில் (பதஞ்சலி, வியாக்கிரபாதர் போன்றோர் மீது) அன்போடு நடனமாடிய சிவனுக்குக் கண்ணை ஒத்த புதல்வனே! செழுமையான சங்கினங்கள் ஈன்ற முத்துகள் வயல்களிலெல்லாம் சிதறிக்கிடக்கின்ற எட்டிக்குடியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
கடலையும்; விஷத்தையும்; அம்பையும்; மானையும்; மீனையும்; தாமரை மலரையும் ஒத்த விழிகளைக் கொண்ட பெண்களுடைய,
பொற்சிமிழையும்; தாமரை மொட்டையும்; குன்றத்தையும் ஒத்த, முத்துமாலை அணிந்த மார்பகங்கள் மனத்திலே தைப்பதனால் அந்த நினைவகலாமல்; ஆற்றல் மிகுந்ததான கலவியின்பத்தை மனத்தால் மிகவும் விரும்பி; அதனால் செல்வத்தையும் உடல் நலத்தையும் இழந்து; வறுமையுற்று; சோம்பலுக்கு ஆளாகி மனம் மயங்கி அழிந்துபோகாதபடி தனியேனாகிய அடியேனுக்கு உன்னுடைய தாமரைத் திருவடிகளைத் தருவதற்காக அன்போடு வந்தருள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளை மீட்டுள்ளேன்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

செங்கல்பட்டில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

ஆப்பனூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


