‘செந்தமிழாலே உன்னைப் பாடி, அந்தப் பாடல்களைப் பாடும் அன்பர்கள் மகிழ்ந்திடுமாறு வரமருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் மதுரைக்கானது.
அழகான தாள அமைப்பு. அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளை உடைய பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளை உடையவை; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஒரு மெல்லின ஒற்று இடைப்படும் நான்கு குற்றெழுத்துகளைக் கொண்டவை. அத்தனை எழுத்துகளும் குறிலாகப் பயிலும் குறுவண்ணம் என்ற அமைப்பு.
தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன தனதான
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத மதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு மருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்தடி மகிழ்வோனே
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித மணவாளா
கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

