பதச் சேதம் | சொற் பொருள் |
திமிரமாம் மனமா(ம்) மட மடமையேன் இடர் ஆணவம் திமிரமே அரி சூரிய திரி லோக
| திமிரமாம்: இருள் ஆகும், இருள் நிறைந்த; (திமிரம்: இருள்); திமிரமே அரி: இருட்டை அகற்றும்; |
தினகரா சிவ காரண ப(ன்)னக பூஷண ஆரண சிவ சுதா அரி நாரணன் மருகோனே
| பனக: பன்னக—பாம்பை; பூஷண: அணிந்த; ஆரண: வேத (முதல்வனான); சிவசுதா: சிவன் மகனே; |
குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி குண கலா நிதி நாரணி தரு கோவே
| சாமளை: கரிய நிறத்தவள்; அமலி: மலமற்றவள், மாசற்றவள்; யாமளை: பச்சை நிறத்தவள்; கலாநிதி: கலைச் செல்வி; |
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம்
| சகளேசுர: சகள(ம்) ஈசுர, சகளம்: உருவத் திருமேனி; சம்: |
பமர(ம்) பார ப்ரப அருண படல தாரக மா சுக பசுர(ம்) பாடன பாளித பகளம் (பளகம்) ஈச
| பமரம்: வண்டுகள்; பார: நிறைந்த; ப்ரப: ஒளிவீசும்; அருண: சிவந்த; படல: கூட்டமான, கொத்தான; தாரக(ம்): பிரணவம்; பசுர(ம்): பாசுரம் (குறுக்கல் விகாரம்; பாளித: (செம்) பட்டை (அணிந்தவனே); பகளம்: பளகம் என்பதன் திரிபு; பளகம்: மலை; |
பசித பாரண வாரண துவச ஏடக மா அயில் பரவு(ம்) பாணித பாவல பர யோக
| பசித: திருநீறு; பாரண: திருப்தியடைபவனே; வாரண துவச: சேவல் கொடி; ஏடக: மேன்மையுள்ள; மா அயில்: பெரிய வேலை; பாணித: (பாணி: கை) கையில் ஏந்தியவனே; |
சம(ம்) பராமத சாதல சமயம் ஆறு இரு தேவத சமய நாயக மா மயில் முது வீர
| சமம்: (வாதமாகிய) போர்; பராமத: புறமதங்களின்; சாதல: நசிவுக்குக் காரணனே; இருதேவத: பெரிய தேவனே; |
சகல லோகமும் ஆசு அறு சகல வேதமுமே தொழு(ம்) சமர மா புரி மேவிய பெருமாளே.
| சமர மாபுரி: திருப்போரூர்; ஆசறு: குற்றமற்ற; |
திமிர மாமன மாமட மடமையேன் இடர் ஆணவ திமிரமே யரி சூரிய... இருள் நிறைந்த மனத்தையும் மிகுந்த அறியாமையையும் உடைய என்னுடைய ஆணவமாகிய இருட்டை விலக்குகின்ற (ஞானமாகிய) சூரியனே!
திரிலோக தினகரா சிவ காரண பனக பூஷண ஆரண சிவசுதா அரி நாரணன் மருகோனே... மூவுலகங்களுக்கும் ஒளி தருகின்ற தினகரனே! சிவனே! மூல காரணனே! நாகங்களை அணிந்தவரும் வேத முதல்வருமான சிவபெருமானின் மகனே! ஹரியாகிய திருமாலின் மருகனே!
குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி குணகலாநிதி நாரணி தருகோவே... குமரியும்; கரியநிறம் கொண்டவளும்; உமையம்மையும்; மாசற்றவளும்; பச்சை வண்ணத்தவளும்; பூரணமானவளும்; குணச்செல்வியுமான நாராயணி அருளிய முதல்வனே!
குருகுகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மாமகள் ஆசைகொள் மணியே... குருவே! குகனே! குமரேசனே! சரவணனே! உருவத் திருமேனியை உடைய ஈசனே! குறவர் மகளான வள்ளி விரும்புகின்ற மணியே!
சம் பமர பார ப்ரபா அருண படல தாரக மாசுக பசுர பாடன பாளித பகளேச... வண்டுகள் நன்றாக மொய்ப்பதும்; நிறைந்ததும்; ஒளிவீசுவதும்; சிவந்த நிறமுடையதும்; கொத்தானதுமான வெட்சி மாலைகளை அணிந்தவனே! பேரின்பப் பொருளே! (தேவாரப்) பாசுரங்களை உலகுக்குப் பாடியளித்த (திருஞான சம்பந்தனே)! செம்பட்டு ஆடையை அணிந்தவனே! மலைகளின் தலைவனே!
பசித பாரண வாரண துவச ஏடக மாவயில் பரவு பாணித பாவல பரயோக... திருநீற்றால் திருப்தியடைபவனே! சேவலைக் கொடியாகக் கொண்டவனே! மேன்மைமிக்கதும் பெரியதுமான வேலைக் கரத்தில் ஏந்தியவனே! பாக்களில் வல்லவனே! மேலான யோகத்தின் மூர்த்தியே!
சம பராமத சாதல சமயம் ஆறிரு தேவத சமய நாயக மாமயில் முதுவீர... வாதப் போரிலே ஈடுபடுகின்ற பரசமயங்களான பௌத்தம், சமணம் போன்றவற்றின் அழிவுக்குக் காரணமாக விளங்கியவனே! ஆறு சமயங்களுக்கும் உரிய* பெரிய தேவனே! அழகிய மயிலை வாகனமாகக் கொண்ட பெரிய வீரனே!
(‘ஆறிரு தேவத சமய நாயக’ என்பதை ‘ஆறு சமய இருதேவத நாயக’ என்று அன்வயப்படுத்துக.)
சகலலோகமும் ஆசறு சகல வேதமுமேதொழு சமர மாபுரி மேவிய பெருமாளே.... எல்லா உலகங்களும் குற்றமற்றவையான எல்லா வேதங்களும் தொழுகின்ற திருப்போரூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
இருள் நிறைந்த மனத்தையும் மிகுந்த அறியாமையையும் உடையவனான எனது ஆணவமாகிய இருட்டை விலக்குகின்ற ஞான சூரியனே! மூவுலகங்களுக்கும் ஒளிதருபவனான சூரியனே! சிவனே! மூல காரணனே! நாகாபரணரும் வேதமுதல்வருமான சிவனாருடைய புத்திரனே! திருமாலின் மருகனே! குமரியும்; கரியநிறம் கொண்டவளும்; உமையம்மையும்; மாசற்றவளும்; பச்சை வண்ணத்தவளும்; பூரணமானவளும்; குணச்செல்வியுமான நாராயணி அருளிய முதல்வனே! குருவே! குகனே! குமரேசனே! சரவணனே! உருவத் திருமேனியை உடைய ஈசனே! குறவர் மகளான வள்ளி விரும்புகின்ற மணியே!
வண்டுகள் நன்றாக மொய்ப்பதும்; நிறைந்ததும்; ஒளிவீசுவதும்; சிவந்த நிறமுடையதும்; கொத்தானதுமான வெட்சி மாலைகளை அணிந்தவனே! பேரின்பப் பொருளே! (தேவாரப்) பாசுரங்களை உலகுக்குப் பாடியளித்த (திருஞான சம்பந்தனே)! செம்பட்டு ஆடையை அணிந்தவனே! மலைகளின் தலைவனே! திருநீற்றால் திருப்தியடைபவனே! சேவலைக் கொடியாகக் கொண்டவனே! மேன்மைமிக்கதும் பெரியதுமான வேலைக் கரத்தில் ஏந்தியவனே! பாக்களில் வல்லவனே! மேலான யோகத்தின் மூர்த்தியே! வாதப் போரிலே ஈடுபடுகின்ற பரசமயங்களான பௌத்தம், சமணம் போன்றவற்றின் அழிவுக்குக் காரணமாக விளங்கியவனே! ஆறு சமயங்களுக்கும் உரிய பெரிய தேவனே! அழகிய மயிலை வாகனமாகக் கொண்ட பெரிய வீரனே! எல்லா உலகங்களும் குற்றமற்றவையான எல்லா வேதங்களும் தொழுகின்ற திருப்போரூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே! உன்னைத் துதிக்கின்றேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

