நற்றாயிரங்கல் துறையில் முருகனின்மேல் காதல் கொண்ட தலைவியின் தாய் முருகனைப் பார்த்துப் பாடுவதாக அமைந்த இப்பாடல் காமத்தூர் என்னும் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட பாடல். எல்லாச் சீர்களிலும் ஒரு நெடில், ஒரு குறில் ஒரு வல்லொற்று ஒவ்வொரு சீரிலும் இரண்டு இரண்டு எழுத்துகளாக அமைந்திருக்கிறது.
தானத் தானத் தானத் தானத்
தானத் தானத் தனதானா
ஆகத் தேதப் பாமற் சேரிக்
கார்கைத் தேறற் கணையாலே
ஆலப் பாலைப் போலக் கோலத்
தாயக் காயப் பிறையாலே
போகத் தேசற் றேதற் பாயற்
பூவிற் றீயிற் கருகாதே
போதக் காதற் போகத் தாளைப்
பூரித் தாரப் புணராயே
தோகைக் கேயுற் றேறித் தோயச்
சூர்கெட் டோடப் பொரும்வேலா
சோதிக் காலைப் போதக் கூவத்
தூவற் சேவற் கொடியோனே
பாகொத் தேசொற் பாகத் தாளைப்
பாரித் தார்நற் குமரேசா
பாரிற் காமத் தூரிற் சீலப்
பாலத் தேவப் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

