‘நான் இகழ்ச்சிக்கிடமாய்க் கிடக்கலாமா’ என்று கேட்டு இகழ்ச்சியை நீக்கக் கோரும் இப்பாடல் திருவாரூருக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட முற்றிலும் நெடிலெழுத்துகளால் ஆன பாடல். ஒன்று முதல் ஐந்தாவது சீர்வரையில் இரண்டிரண்டு எழுத்துகள்; இரண்டும் நெடில். ஆறாவது சீரில் மட்டும் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகள் என்று அமைந்திருக்கிறது. பாடல் முழுவதிலும் இந்த ஆறாவது சீரில் மட்டும்தான் குற்றெழுத்து இடம்பெற்றிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
தானா தானா தானா தானா
தானா தானத் தனதான
பாலோ தேனோ பாகோ வானோர்
பாரா வாரத் தமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
பானோ வான்முத் தெனநீளத்
தாலோ தாலே லோபா டாதே
தாய்மார் நேசத் துனுசாரந்
தாரா தேபே ரீயா தேபே
சாதே யேசத் தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாண்மா
லானா தேனற் புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப் புகுவோனே
சேலோ டேசே ராரால் சாலார்
சீரா ரூரிற் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


