யமபயம் கெடுவதைக் கோரும் இப்பாடல் திருச்செந்தூருக்கானது.
அடிக்கு ஒற்றொழிது 19 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகள் என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தாத்தத் தத்தன தாத்தத் தத்தன
தாத்தத் தத்தன தனதான
மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
மூச்சுற் றுச்செயல் தடுமாறி
மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
மூக்குக் குட்சளி யிளையோடும்
கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
கூட்டிற் புக்குயி ரலையாமுன்
கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்
கூட்டிச் சற்றருள் புரிவாயே
காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்
காப்பைக் கட்டவர் குருநாதா
காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல
காப்புக் குத்திர மொழிவோனே
வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
வாய்க்குச் சித்திர முருகோனே
வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை
வாய்க்குட் பொற்பமர் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

ஆலங்குடி தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


