காஷ்மீர் போராட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றுவிட்டது என்றும், மனோதத்துவ ரீதியிலாயினும் சரி, உண்மை அடிப்படையான ரீதியிலும் சரி வெற்றி இந்தியாவுடையதே என்று பிரதமர் நேரு கூறினார்.
பார்லிமென்ட்டில் அவர் பேசும்போது, தாங்கள் தோற்றுவிட்டதைப் பாகிஸ்தான் தலைவர்கள் அறிந்துகொண்டுவிட்டனர். பாகிஸ்தானில் எழுப்பப்படும் கோரக் கூச்சல்களுக்குக் காரணம் இதுதான் என்று அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் தோல்விக்கு இந்திய ராணுவமோ வேறெந்த ராணுவமோ காரணமல்ல. ஷேக் அப்துல்லாவும், காஷ்மீர் தேசிய மாநாடும் கடைப்பிடிக்கும் லட்சியம்தான் பாகிஸ்தானின் இரு தேசக் கொள்கையை முறியடித்தது.
இந்தியா - பாகிஸ்தான் தகராறைத் தீர்ப்பதற்கு யுத்தத்தை ஒரு சாதனமாக இந்தியா கருதவில்லை. ஆனால், எதிர்தரப்பினருக்கு யுத்த வெறி பிடித்திருப்பதால், நாம் அதற்கும் தயாராக இருக்கவேண்டி இருக்கிறது. யுத்தம் வந்தால்கூட இந்தியா மீதி படையெடுப்பு நடைபெற முடியாது என்பதால்தான் நாம் சிவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இருக்கிறோம்.
காஷ்மீரில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால் முடிவு தற்போதைய சர்க்காருக்கு சாதகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆசியாவின் எதிரிகளான சில வல்லரசுகள், காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தானை ஆதரிப்பதாக பிரதமர் நேரு குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


