இந்த நாளில் அன்று
(07.03.1958)
கவர்ச்சியாக சிங்காரித்து பொது இடங்களில் பெண்கள் வரக்கூடாது
பெண்களைப் பலவந்தம் செய்வோருக்கு கடும் தண்டனை விதிக்கக் கோரி ஒரு தனி மெம்பர் கொண்டு வந்த மசோதாவை ராஜ்ய சபா இன்று நிராகரித்தது. அதிகபட்சம் 15 வருஷ சிறைத் தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டுமென அம்மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மசோதா மீது நடந்த இரண்டரை மணி நேர விவாதத்தின்போது பேசிய பெரும்பாலான மெம்பர்கள் அம்மசோதாவை எதிர்த்தனர். அம்மசோதாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பல்வேறு குற்றங்களுக்கு, இந்திய பீனல் சட்டத்திலேயே தக்க தண்டனைகள் விதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினர்.
உதவி உள்நாட்டு மந்திரி ஸ்ரீமதி வயலிட் ஆல்வா குறிக்கிட்டுப் பேசுகையில், எந்த கோணத்தில் பார்த்தாலும் அம்மசோதா ஏற்கத்தக்கதல்ல என்றார். மிகவும் அர்த்தமில்லாத, அசாத்தியமான ஒரு மசோதா அது. அதுபோன்ற ஒரு மசோதா இதற்கு முன் அச்சபையில் வந்ததே கிடையாது என்று ஸ்ரீமதி ஆல்வா கூறினார். நகரங்களில் பெண்களை இம்சிக்கும் தெருவோர ரோமியோக்களை தண்டிப்பதற்கு இந்திய பீனல் சட்டத்திலுள்ள அதிகாரம் போதாது என்று ஸ்ரீ சாவித்திரி நிகம் கூறினார்.
விவாதத்தில் பங்கெடுத்துக்கொண்ட 10 மெம்பர்களில் 7 பேர் (இருவர் பெண்கள்), அம்மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். பால் கவர்ச்சிக்கு இடமளிக்கும் வகையில் பொது இடங்களில் பெண்கள் சிங்காரித்துக்கொண்டு போகக்கூடாதென ஒரு பெண் மெம்பரே கடிந்துகொண்டார். ஆண்கள் மீதே எல்லா பழியும் சுமத்தக்கூடாது. ஒரு அழகான முகத்தை பார்த்ததற்காக தண்டிக்க வேண்டும் என்று சொல்வது சரியல்ல. இது ஒருதலைப்பட்ச நடவடிக்கை அல்ல. மாலை நேரங்களில் டில்லி கன்னாட் சர்க்கஸில் தினம் நாம் காண்பதென்ன? ஜனங்களின் கவனத்தைக் கவரும் வகையில் பொது இடங்களில் கண்டபடி திரியும் இளம் பெண்களை சீர்திருத்த, ஊக்கமுள்ள சமூக ஊழியர்கள் முன்வர வேண்டும் என்று ஒரு மெம்மர் கூறினார்.
---
லோக சபையில், சட்டத்தின் முன் பெண்களுடன் தங்களை சமமாக நடத்த வேண்டுமென ஆண்கள் போராட வேண்டியிருந்தது. சோரம் போகும் குற்றத்துக்கு ஆண், பெண் இருவருக்கும் சம தண்டனை விதிக்கக் கோரி ஸ்ரீ ரகுநாத் சிங் ஒரு மசோதா கொண்டு வந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


