இந்த நாளில் அன்று
(10.03.1962)
எல்லைத் தகராறு: இந்தியாவுக்கு சீன சர்க்காரின் புதிய கடிதம்
இந்த வருடம் ஜூன் மாதம் காலாவதியாகும் திபேத் பற்றிய சீனா - இந்தியா உடன்படிக்கையைப் புதுப்பிக்கும் விஷயமாக சீன சர்க்காரிடமிருந்து இந்திய அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவில் பொதுத்தேர்தல் முடிவடைந்துவிட்டதால், எல்லைத் தகராறை தீர்க்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென சீனாவின் இந்தப் புதிய கடிதம் நம்பிக்கை தெரிவிப்பதாகச் சொல்லப்படுகிறது.
சட்டவிரோதமாக சீனா கைப்பற்றியுள்ள இந்தியாவின் பெரும்பகுதியை அது காலி செய்தாலன்றி ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது பற்றிப் பேச இந்தியா தயாராக இருக்காது என்று இந்தியா எழுதிய குறிப்புக்கு பதிலளிக்கும் வகையில் சீனாவின் இக்கடிதம் சில நாட்களுக்கு முன்பு வந்தது.
சீனக் குறிப்பின் விவரங்கள் தெரியவில்லை. ஆனால், உயர் கட்டத்தில் அது பரிசீலிக்கப்படுவதாகவும், விரைவில் தொடங்கவுள்ள பார்லிமென்ட் கூட்டத்தில் அது பற்றி விரைவில் தகவல் அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

