27.12.1968: 'அப்பலோ 8' எனும் மனித விண்கலம் பூமிக்கு திரும்பிய தினம் இன்று!
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா 1968 டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று 'அப்பலோ 8' எனும் மனித விண்கலத்தினை விண்ணுக்கு அனுப்பியது.


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா 1968 டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று 'அப்பலோ 8' எனும் மனித விண்கலத்தினை விண்ணுக்கு அனுப்பியது.
முதன் முதலாக பூமியின் சுற்றுப் பாதையைவிட்டு விண்வெளியில் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் மனிதன் பயணித்த முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.
இவ்விண்கலத்தில் பிரானங் போர்மேன், ஜேம்ஸ் லொவல் மற்றும் வில்லியம் அண்டெர்ஸ் ஆகிய 3 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பயணித்தனர்.
முதன் முதலாக புவியைக் கடந்து சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் அப்பலோ 8 மனிதனுடன் பயணித்தது. இருப்பினும் சந்திரனில் தரையிறங்கிய முதல் விண்கலம் 'அப்பலோ 11' ஆகும்.
தனது சோதனை பயணத்தை முடித்துக் கொண்டு 'அப்பலோ 8' எனும் மனித விண்கலம் 27.12.1968 அன்று பூமிக்கு திரும்பியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...