/

எல்லைக் கோடு:  தேன்ராஜா

Updated On :21 ஆகஸ்ட் 2016, 12:11 pm

எல்லைக்கோடு
மனிதனை தவிர
மற்ற உயிரினங்களுக்கு 
இல்லை
இக்கோடு .....
 
பறவையின்
வலசை  கண்டம்
தாண்டும்
அவைகளுக்கு
வானமே எல்லை..... ..
 
மீனினமோ
கடல் விட்டு
கடல் போகும்
அவைகளுக்கு 
கரைகளே 
எல்லை ......
 
கற்பனை கோடு 
ஒன்றை
வரைந்தான்
மனிதன்
தற்பெருமை
அடைந்தான்
அதன் மூலம் ..
 
கடவுள் படைத்த
உலகத்தை
கண்ணுக்கு
தெரிந்த வரை
பிரிக்கிறான் 
கடவுள்
படைத்த மனிதன் .... ...
 
ஆறறிவு
பெற்றுவிட்டதால்
அகிலத்தை ஆள 
நினைக்கிறான்
ஆசை கொண்ட
மனிதன் ....
 
ஐந்தறிவு 
விலங்குகள் கூட
ஆராய்ந்து
பார்ப்பதில்லை
அதனதன்
எல்லையை .....
 
எல்லைக்கோடு 
மனிதனை தவிர
மற்ற உயிரினங்களுக்கு 
இல்லை
இக்கோடு .....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.