எதிர் காலம் கனவல்ல
தெரியாத நிஜம்
தெரியாத நிஜத்தை
தேர்ந்தெடுத்துக் கொள்ளுவதும்
தெரிந்த்து போல் ஆக்குவதும்
தீர்மானமாய் நீ எடுக்கும்
இலக்குகளில் உள்ளதடா
உன் இலக்கில் உயிரை வை
உயிர் போகு மென்றாலும்
உரமேற்றிப் போராடு
இலக்கெல்லாம் இலகுவாகும்
வரலாற்றுப் புத்தகத்தில்
உன் பக்கம் தேர்ந்தெடுத்து
அடித்தளமிடு என்றார்
அறிவு ஞானி அப்துல் கலாம்
எதிர் கால கனவை எண்ணி
என்ன எண்ணம்
கொண்டிருக்கிறாய் என்
இளங் காளைகளே
ஏளனங்கள் தடை காட்டும்
எதிர் வினைகள் புறந் தள்ளும்
உடனிருந்தே உனை கொல்லும்
எட்டப்பனை அறிந்திடுடா
உன் வழியில் உயர்ந்திடுடா
மதுக் குடுவை புறந்தள்ளி
புதுப் புனலாய் புறப்படுடா
இணையத்தில் மட்டும் என்றின்றி
இதயத்தால் வாழ்ந்திடுடா
விலங்கினை ஒத்திடும்
காமத்தில் கரைந்திடாமல்
அறிவொளி விளக்கேந்தி
அகிலத்தை காத்திடுடா
கவர்ந்திழுக்கும் அரசியலார்
அடுக்கு மொழியில் அடங்கிடாமல்
உடுக்கையாய் அடித்திட டா
உயர்வான வாழ்க்கை னோக்கி
இமை மூடியபின் எழுவதல்ல
இமைக்காமல் பொழுதை வீணாக
சமைக்காமல் காலத்தே
அமைப்பதுவே எதிர்கால கனவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி மரணம்
14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொள்ளையா் உ.பி.யில் கைது
போலி வங்கி கணக்கு மூலம் இணையவழி மோசடிக்கு உதவி: வங்கி ஊழியா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

