வானமழை நீயெனக்கு , வான்முகிலாய் எனைநாடி
வந்திட்டு கருணைமழை தனைபொழிய வேண்டும் ;
வளமையதைப் பெருகிடும் தேவதையாய் நீவந்து
வற்றாது மகிழ்வூட்டும் மனங்கொள்ள வேண்டும் !
கானமதாய் நீயெனக்கு என்னாளும் வாழ்வினில்
கத்தும்குயி லோசையென மகிழ்வூட்ட வேண்டும் ;
கவிதையாய் , குழலதாய் , இன்னிசை யாழதாய்
கருத்தினில் என்னாளும் நிலைகொள்ள வேண்டும் !
தேனமுதம் நீயெனக்கு என்றாகி வாழ்வெலாம்
தித்திக்கும் சுவைகூட்ட நான்மகிழ வேண்டும் ;
தென்றலாய் என்வாசல் தன்னில்நீ வீசிவந்து
திளைப்பூட்ட உன்விழிப் பார்வையொன்று போதும் !
ஆனமுத லாகிவந்து வளமதனைக் கூட்டிட்டு
அனைவரும் எனையறியும் வகைசெய்ய வேண்டும் ;
அகிலமே அறிந்திட என்நிலையும் உயர்ந்திட
அதிர்ஷ்டதே வதையுன்னை நானடைய வேண்டும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவின் ரூ.8,000 கூப்பன் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும்: பாஜக!

சேலத்தில் பிரசாரத்தில் பங்கேற்ற ராமதாஸ் மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

