வான மழை நீ யெனக்கு
கானம் தருவேன் உனக்கு
சின்னப் பூவின் இதழாய் நீயே
வண்ண நிலவின் உருவாய் நீயே
என்னை முழுதும் ஆண்டு கொண்டாயே
எண்ணம் முழுதும் நீ ஆனாயே..
சிக்க வைத்த மங்கை நீயே
சிக்கிக் கொண்ட மானுடன் நானே
மக்கி போக இருந்த மனதை
தக்க வைக்க இதயம் தந்தாய்..
நக்கலிடை என் பெயர் சொன்னால்
துக்கமிலை என் இனிய பெண்ணால்..
வஞ்சி யுனை என்னில் வைத்தேன்
அஞ்சி அஞ்சி கவிதை தைத்தேன்
செஞ்சி நகர் சிற்பமும் நீயோ
அஞ்சல் வழி காதல் சொல்வாயோ
நெஞ்சில் உந்தன் நினைவை நிறுத்தி
கஞ்சி யின்றி நாட்களைக் கடத்தி..
செல்லுகிறேன் என் வழி நானே
சொல்லுகிறேன் உன் கதை தானே
கொல்லுவது உன் விழி தானே
மெல்லுவதும் உன் மொழி தானே
அள்ளிக் கொண்ட அழகிய பெண்ணே
தள்ளிச் செல்லாய் மீன்விழிக்
கண்ணே...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

