/
ஆயிரமும் ஐநூறும் செல்லா தென்ற அறிவிப்பால் ஒருநாளில் கடந்து சென்றஓயாத பயணந்தான் தவறிப் போக ஓலமிடும் கறுப்பாடு கூட்ட மாகமேயாத வழியெங்கும் மேய்ந்து செல்ல மேய்ப்பனையே தொலைத்தபடி திரிந்து போககாயாத கானகமாய் உலகம் மாறிக் காகிதமாய் வெறுந்தாளாய்க் கண்ணில் தோன்றும்.வழிதவறும் பயணமெலாம் இலக்கை எய்தா வறட்டுவழிப் பயணமென ஆகிப் போகும்.மொழிதவறும் பயணமெலாம் இலக்கி யத்தில் முறைதவறி வெறும்போக்காய் மாறிப் போகும்.விழிதவறும் பயணமெலாம் தடுமாற் றத்தில் விதியென்றே விரைவாகக் கலைந்து போகும்.பழிசொல்லப் பயணிக்கும் பயணம் வாழ்வின் பாதையது தவறியதாய்க் கொள்வர் நல்லோர்.சொன்னசொல்லைத் தவறுகின்ற மாந்தர் யாரும் சுகமாகப் பயணிக்கும் நிலையில் இல்லைதன்னையறி கின்றமனம் கொண்டோர் என்றும் தடம்மாறாப் பயணத்தில் தாமாய்ச் செல்வர்.ஒன்றுமறி யாதவுளம் கொண்டு வாழும் உத்தமர்தம் பயணந்தான் சிறந்த தாகும்.என்னநிலை வந்தாலும் எப்போ தும்நம் எல்லையினை மறவாத பயணம் காக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

