செல்லாக் காசு என
சொல்வதற்கு முன்
செல்லும் பணக்கட்டுகள்
பண முதலைகளால்
பதுங்கியது பலகோடி
பல இடங்களில் பலவிதமாக.
உழைக்கும் தொழிலாளிக்கு
ஊதியம் போனஸ்
உயர்த்தி வழங்குவதற்கு
பேச்சு வார்த்தை என
பல நாட்கள் தொழிலாளிகளை
பதற வைத்து சேர்த்த
மனித நேயமற்ற பணப்பேய்கள்
பதுக்கிய பணக்கட்டுகள் !
செல்லாக் காசான பின்
பதுக்கிய பணமெல்லாம்
கோவில் உண்டியலில்
கட்டுக் கட்டாக விழும்போது
காந்தி படம் மட்டுமல்ல
கருவறைக் கடவுளும் சிரித்தார் !
தெருவில் யாருக்கும்
தெரியாமல் அக்னியில்
பணக்கட்டுகள் கட்டுக்கட்டாக
பாமர ஏழைகளுக்கும்
பயனில்லாமல் எரிந்தது !
செல்லாக் காசுகள்
செடி கொடிகளில்
பூக்காத காகிதப்பூக்கள் !
காகிதப் பூக்களின்
அழகை ரசிக்கலாம்
அதனை நுகர முடியாது
நுகர்ந்தால் மணமிருக்காது !
குறுகிய ஜன்னல் வழியே
வந்த பணக்கட்டுகள்
செல்லாக் காசாக
வாசல் வழியே சென்றது !
பணப் பிசாசுகளே... ..
இனி வருங்காலங்களில்
செல்லும் பணங்காசுகள்
செல்லாக் காசாவதற்கு முன்
தேவைக்கு அதிகமான
பணம் காசுகளை
பதுக்கி வைக்காமல்....
நாட்டு நலன் கருதி
பயன் உள்ளவைகளுக்கு
நாள்தோறும் பயன்படுத்தி
நாட்டுக்கும் வீட்டுக்கும்
நல்லது செய்வீர்களாக !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

