கைதிகளை
காவுவாங்கும்
மரணகூடங்களாய்
சிறைகூடங்கள்!!
காதலிக்கமறுக்கும்
கன்னியருக்கோ
சாலைகள்கூட
வதைகூடங்கள்.
விலங்குகளுக்கு
உயிர்வாழ்தல், இனப்பெருக்கம்
மட்டுமேவிதி.
மனிதம்அற்ற
மாக்களுக்கோ
எவ்வழி ஆகிலும்
குவிக்கவேண்டும்
நிதி
காசுக்காகஅஞ்சாது
செய்வோமே
கொலை.
கற்பழிப்பு ,கொள்ளை
பலருக்குகைவந்த
கலை
இன்று
மெத்தப்படிக்க
வேண்டாம்.
மேனிநோக உழைக்க
வேண்டாம் - வெயிலில்
சுற்றித்திரிய
வேண்டாம்.
சுகமெதுவும்இழக்க
வேண்டாம்.
கத்தைபணமிருந்தால்
கடவுளையும்
வாங்கிடலாம்.
நீதிமட்டும்
விதிவிலக்கா?
நீங்களேசொல்லுங்கள்.
அந்தோபரிதாபம்!
அதிகாரம்
கொண்டோருக்கும்
ஆணவ
பணமுதலைகளுக்கும்
ஆசைநாயகியாய்
ஆகிப்போனாள்
நீதிதேவதைஎனும்
பேதை!
இதுபுரியாமல்
இன்னும்ஏழைகள்
நீதிதேடிஅலைவது
முடிவிலாநீண்டதொரு
பாதை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

