திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

எழுத்து   -   ஆர்.தியாகு

Updated On :3 அக்டோபர் 2016, 10:55 am

எழுத்துக்கள் மட்டும்
இல்லையென்றால்...

யோசித்தாலும்
திருவள்ளுவரை தெரிந்திருக்காது!
வரலாறு தெரியாமல்
சாதிகள் செத்திருக்கும்!

கையெழுத்திற்கு லஞ்சம்
பட்டாவிற்கு பணம்
சான்றிதழுக்கு தனி விலை இருக்காது!

காதல் கடிதங்கள்
மதத்திற்கு ஒரு புத்தகம்
பத்திரிக்கையின் பொய்கள்
என எதுவும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கோவில் "டியூப் லைட்" வெளிச்சத்தை
எழுத்துக்கள் மறைத்திருக்காது
"ஆட்டோகிராப்" போடும் நேரங்களில்
கொஞ்சம் நம்மோடு பேசியிருப்பார்கள்!

பரீட்சையில் பிட்டுகள் ஒழிந்திருக்கும்
தபால்காரனுக்கு வேலை போயிருக்கும்
நம் கடவுள் எண்ணிக்கையிலும்
ஒன்று குறைந்திருக்கும்!

நீரின்றி மட்டுமல்ல‌
எழுத்தின்றியும் அமையாது உலகு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.