/
வரிவடிவம் மொழிகளுக்குள் ளெழுத்தென் பாரே வடித்தபல காப்பியங்கள் நுல்கள் எல்லாம்!தரிக்கெட்டுத் திரிபுராத வண்ணம் செய்தச் சாதனைதான் எழுத்திலன்றோ? மறத்த லேது!கரிகொண்டு பாறைமீதும், ஓலை கொண்டும் காப்பியங்கள், இலக்கணங்கள் படைத்தா ரன்றோ!நெறிகொண்டுத் தமிழ்வளர்த்த பலவாம் நூல்கள் நீச்சர்கள் அழித்துவிட மிச்சம் காப்போம்!ஏடெடுத்து நலமுடனே கற்று ணர்ந்து ஈடிலாத கல்வியினை புத்தி யேற்றி!கூடெடுத்து திரிந்திடுவார் உலகில் உய்ய கூன்விழுவான் கல்லாமை என்ப தாலே!வீடெனவே தேடுவாரின் பேறு எங்கே மேவியாங்கு வணங்குதலே இறையோ காட்ட!காடெனவோ வந்தடைந்த மூட ரென்பார் கல்விக்கு எழுத்தேதான் வித்தாய் சேரும்.!எல்லோரின் வாழ்வினிலே செம்மை யுண்டு எழுதுகோலே கவியாக்கும் எழுத்தால் நூலாய்!வல்லோர்க்கும் தலைமேலே எழுத்துண் டாமோ வாழ்வதனை அதுகார மென்பார்ச் சொல்லி!நல்லோரும் நனிசிறக்க கற்ற நூல்கள் நைந்துவந்து உதவிடுமே நானி லத்தே!கல்லார்க்கு யாவுளதோ தரணி யெங்கும் காலத்தால் எழுத்தறிதல் சிறப்புச் செய்யும்.!எழுத்துகளே மாற்றங்கள் செய்யு மன்றோ ஏற்றங்க ளுண்டாகும் எழுதி வைத்தால்!பொழுதுகளாய் வீணர்கள் செய்யும் தீதும் போக்குமிந்த சட்டத்தின் எழுத்தா லென்றும்!கொழுந்துகளாம் குழந்தைகளுக் கிங்கே வன்மை கொடியவர்கள் புணர்ந்தழிக்கா சட்டம் வேண்டும்!விழுதுகளாய் காத்திடுங்கள் சமூக மோங்க விந்தைமாந்தர் சாதனைகள் எண்ணில் நூறு.!புரட்சிசெய்யும், அடக்கியொடுக் கியாளும்; மண்ணில் பூத்திடுமே நேர்மையுந்தான் ஒருமைப் பாட்டால்!கரமுயரும், மனிதகுலத் தோள்கள் சேர்ந்தே காலமெல்லாம் நலம்பேண ஒன்று சேர்ந்தே!வரப்புயரும் நெல்லுயரும் உயர்வான் கோணும் மக்களாளும் மாட்சிமையில் சிறப்பு கண்டே!தரமுயர்த்தி தரணியாள எழுத்து வேண்டும் தக்கதொரு ஏட்டினிலே பதிந்து போற்ற.!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

