/
எழுத்தொன்றே தெய்வமென எண்ணி வாழும் எத்தனையோ மாந்தர்கள் இங்கே உண்டாம்,எழுத்ததனைத் தொழிலாகக் கொண்டு வாழ்வார் இருப்பதுவோ வருமானம் இல்லா தென்பார்,எழுத்துக்கும் இயல்புக்கும் இடையே உள்ள எண்ணற்ற வேறுபாடு மனிதர் நெஞ்சைஅழுத்தமாக உலகுக்கெ டுத்துக் காட்டும். அற்புதமாய்ப் படம்பிடிக்கும் அவனி யெங்கும்.கல்வெட்டில் பதிகின்ற எழுத்தோ என்றும் காலத்தை, வரலாற்றைக் கண்முன் காட்டும்.எல்லோரும் அறிகின்ற வண்ணம் முன்னம் இருந்தகதை நடந்தகதை எல்லாம் காட்டும்.சொல்லொன்று பொருளொன்றாய்ச் சொல்லும் எந்தச் சுவையில்லா எழுத்தெல்லாம் காலந் தாண்டிநில்லாது தண்ணீரில் எழுதி னாற்போல் நிலையின்றி மறைந்துவிடும் எழுத்தாய்ப் போகும்.கையெழுத்து நன்றாக இருந்திட் டாலே கபாலத்தில் அயனெழுத்துச் சரியில் லாமல்செய்யபிழை போலதுவே இருக்கு மென்பார். சிந்திப்பீர் தலையெழுத்தைச் சீராய்ச் செய்யதெய்வமொன்றே துணையாகக் கொள்வீர் நல்ல திசையெழுத்தாய் மந்திரச்சொல் துணையாய்ச் சொல்வீர்.வையகத்தில் வாழ்வதற்கு முறையாய்ச் சொல்லும் வழியொன்றே நல்லெழுத்தை வசமாய்க் கொள்வீர்.ஓரெழுத்து மந்திரமே ஓங்கா ரந்தான், ஒருவாறு உயரெழுத்தாய் ஒப்பு விக்கும்ஈரெழுத்தில் 'சிவ'வென்றும் 'ராம' வென்றும் எழுகின்ற மந்திரங்கள் எழிலைக் கூட்டும்.பாரெங்கும் பரவிநிற்கும் 'சக்தி' என்று பகர்கின்ற மூவெழுத்து மந்தி ரந்தான்.சீரெழுத்தாய் அஞ்செழுத்தும் எட்டெ ழுத்தும் செம்மையாகும் மனமதனைச் சிந்திப் பீரே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

