தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பொம்மைகள்: கே. அசோகன்

Updated On :10 அக்டோபர் 2016, 11:48 am

இயற்கையின் படைப்பினில் இருப்பவை
எல்லாம் ஆடுகின்ற பொம்மைகள் தான்!
குயவனின் வனைவினில் குடமாகவே
குழைந்து வருவதும் பொம்மைகளே!

வியக்கும் வானில் பொழியும் நிலவும்
விண்மீன்களும் பொம்மைகள் தானே
நயமாய் போற்றும் நாம் வணங்கிடும்
நல்தெய்வ சிலையும் பொம்மை தானே!

வயலில் வந்திடும்பறவை  தன்னை
விரட்டிடும்  உருவமும் பொம்மையே
புயல்,மழை  புதுதென்றல் காற்றும்
படைப்பினில் ஆடிடும் பொம்மைகளே!

பொய்யென பகலும் மேனியுமே
பட்டாடை உடுத்திய  பொம்மையே !
கையளவு இதயத்திலே வானளவு
ஆசையை கொண்டவனும் பொம்மைகளே!

கருவறையில் இருந்திட்ட காலத்திலே
குழந்தையாய் இருத்தலும் பொம்மையே
விருந்தினர் கூடத்தில்  சிரிக்க வா—வா
வரவேற்று  நிற்பதும் பொம்மையே
தெருவோர வாழ்வினிலே நாளும்
திகைத்திடும் ஏழைகளும் பொம்மையே !
உருவத்தால் உயர்ந்தே ஓங்கி நிற்கும்
ஒண்கோபுரமும்  நல்ல பொம்மைகளே!

கடமையில் காற்றில்விட்டு கணக்காய்
கண்மூடி இருப்பவனும் பொம்மையே !
மடமையை மனதில் ஏற்றி மூடத்தை
முதுகில் ஏற்றியவன்  பொம்மையே
நடமாடி கிடந்தாலும்  நல்லவைகள்
நயமாய்  செய்யாதவனும்  பொம்மையே
குடமாய் தங்கத்தை சேர்க்கத்தான்
குறுக்காய் செல்பவனும்  பொம்மையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.