பொம்மைகள்: முனைவர் சி. அருள் ஜோசப் ராஜ்

Updated on
1 min read
பாசமுடன் குழந்தைகளே விளையாடவே  பங்குடனே உருவாகும் பொம்மை! பொம்மை!!அசலைப்போல் நகலொன்று இருந்தால் பொம்மை   அதிசயம்தான் அதுவென்று சொல்வார் உண்மை!அசலாக உயிரில்லை உருவே உண்டு   அதுசெய்யும் சேட்டையல்லாம்  இதற்கும் உண்டுவசதியாக ஓரிடத்தில் நீயும் நின்றால்   வருங்காலம் உனைச் சொல்லும் பொம்மை என்று!விலங்குக்கும்  மனிதனுக்கும் பொம்மை உண்டு   விதவிதமாய் பொருள்சேர்த்து செய்யும் பொம்மைநிலம்பிளந்து மண்ணெடுத்து செய்யும் பொம்மை  நிறம்சேர்க்க  அதுசிறக்கும் உண்மை! உண்மை!!பலம் கொண்ட கல்லாலே செய்த பொம்மை  பகுத்தறிவால் அழைப்பாரே  சிலைகள் என்று!கலவையான உலோகத்தால் செய்த பொம்மை  கடவுளென்றே சொல்வார்கள் பக்தி மிக்கோர்!நேசமிகு மரப்பாச்சி  பொம்மை! ஆடும்  நேர்த்தியான தலையாட்டி பொம்மை!வாசலிலே வைக்கும்நல் திருஷ்டி பொம்மை!  வாங்கிடுவார்  குபேரர்  பொம்மை! குழந்தைவசப்பட்ட கரடிபொம்மை! நடனம் ஆடும்  வடிவழகு பொம்மை! ஆனால், சீனாதேசத்து பொம்மையாலே மகிழ்ச்சி கொள்வார்    தேடியே வாங்கிடுவார் ரோபோ பொம்மை!திகைப்பூடும் மெழுகு மனித பொம்மைதான்  திட்டமிட்டே வேலைசெய்யும்   இயந்திர பொம்மை!     நகைபூட்டும் நாடகபொம் மைதான்! என்றும்    நற்கதையே சொல்லும்தோல் குரங்கு   பொம்மைவகைவகையாய் பொம்மைகளே இருந்தாலுமே  வம்பர்கள் எரிப்பார்கள் உருவ பொம்மை!பகைவளர்த்தே மடிகின்றார்  பலபேர் இன்று! பண்பதனை வளர்க்கட்டும்  பொம்மை பொம்மை !!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com