தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பொம்மைகள்: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated On :10 அக்டோபர் 2016, 11:46 am
கொஞ்சிகொஞ்சி   பேசிநம்மின்   வாக்கைப்  பெற்றுக்            கொலுவேறி   ஆட்சிதனில்   அமர்ந்த  பின்புகிஞ்சித்தும்   நாட்டுநலன்   எண்ணி  டாமல்            கிடைத்தவற்றைச்  சுருட்டுகின்ற   காட்சி   கண்டும்தஞ்சாவூர்   தலையாட்டி   பொம்மை   போன்று            தலையாட்டி   நிற்பதற்கா   வாக்கைப்   போட்டோம்கொஞ்சமேனும்   சொரணையுடன்    கயவர்   தம்மின்            கொடுங்கோலை   வீழ்த்துகற்கே   இணைவோம்   வாரீர் !சாதிகளின்   வெறியாட்டம் !   காதல்   தம்மைச்            சாகடிக்கும்    கொலையாட்டம் !   பெண்க   ளிங்கேவீதிகளில்   நடப்பதற்கும்   அஞ்சு   மாறு            விளைவிக்கும்    பாலியலின்   காம   ஆட்டம்ஆதிக்கம்   செலுத்துகின்ற   கயமை   தன்னை            அகற்றாமல்   பொம்மைகளாய்   நிற்ப   தோநாம்ஓதிட்ட   சங்கநூலின்   சமுதா   யத்தை            ஒழுக்கத்தை    நிலைநாட்ட    இணைவோம்   வாரீர் !வரமாகக்   கிடைத்தஏரி   குளங்க   ளோடு            வயல்களினை    வீடுதொழிற்   சாலை   யாக்கிமரக்காட்டை   மலையழித்துச்   சுற்றுச்  சூழல்            மாசாக்கி   நோய்களினைப்   பரப்பு   கின்றார்இரக்கமற்ற    இச்செயல்கள்   தடுப்ப   தற்கே            இயங்காமல்   பொம்மைகளாய்   இருப்ப   தோநாம்கரமிணைவோம்   சந்ததியர்   வாழ்வ  தற்குக்            காத்திடுவோம்   இயற்கையினை   ஒன்று   சேர்ந்தே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.