தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மனமெனும் மாயப் பேய்:  கவிஞர் இளவல் " ஹரிஹரன்

Updated On :17 அக்டோபர் 2016, 11:02 am
மந்திரக்கோ லொன்றுவேண்டும் நம்மை யாட்டும்        மனமென்னும் மாயப்பேய் தனைய டக்கதந்திரந்தான் செய்தாலும் அடங்கா அந்த       சாகசத்தை அறிவதுதான் முடிவ தில்லை,விந்தையிது என்செயினும் விளங்க வொண்ணா       வேடிக்கை உள்ளிருந்தே வேலை காட்டும்.முந்தையரும் முனிவோரும் முயன்று பார்த்தும்       முடியாமற் போனகதை தெரிந்த தன்றோ.ஐம்புலன்கள் அதன்கருவி ஆசை காட்டி       அதன்வழியே ஆட்டுவிக்கும் சாக சங்கள்,பொய்மையினை மெய்யாகக் கண்முன் காட்டி        புதைகுழியிற் சிக்கவைக்கும் புரிந்து கொள்ளமெய்மதியை மயக்கத்தில் மூழ்க வைத்து       விழிமூடும் நாள்வரையிற் கூட வந்துகைவரிசை காட்டிநிற்கும் கள்ளப் பேய்தான்       கணக்கில்லா நாடகங்கள் காட்டி நிற்கும்.மனமடக்க வேண்டுமெனிற் மௌனங் கொண்டு      மனமில்லா வெளியினிலே சிந்தை கொண்டுமனமொன்றி, அலைபாயும் அறிவின் போக்கை      மனம்நீக்கிக் காண்கின்ற கண்கள் கொண்டுமனதுக்குள் மனதாக   மனதிற் தோன்றும்      மந்திரத்தை உருப்போட மீண்டும் மீண்டும்மனம்தோன்றி மனமடங்கும் சித்தத் திற்குள்     மனமென்னும் பேயோட மனமொ டுங்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.