/
ஆதியிலே புறாவிட்ட கண்ணீர்க் காக அரிந்துசதை அளித்துமன்னன் நீதி காத்தான்வாதியாக பசுஅடித்த மணியைக் கேட்டு வழங்கிட்டான் நீதியினை மகனைக் கொன்றுஏதிலியாய் சிலம்புடைத்த பெண்ணிற் காக ஏந்தியுயிர் தந்துநீதி காத்த மண்ணில்நீதிவிலை போகாதெனும் நம்பிக் கையில் நீதியினைத் தேடுகின்றார் கிடைக்கு மென்றே !பண்ணிசைத்துக் காவிரியாள் நடந்தா ளென்று பகர்கின்ற பாடல்கள் பலவி ருந்தும்கண்முன்னே காட்சிதரத் தடைவி தித்துக் கன்னடத்தான் சிறைக்குள்ளே அடைத்து வைக்கக்கண்ணெல்லாம் பூரிக்க வயல்கள் பூத்துக் கண்டிட்ட முப்போகம் கனவாய்ப் போகத்தண்ணீர்க்காய் நீதியினைத் தேடித் தேடித் தவிக்கின்றான் விவசாயி தமிழ கத்தில் !காலந்தான் கடந்தபோதும் உச்ச மன்றம் காவிரியாள் விலங்கொடித்துத் தீர்ப்ப ளிக்கப்பாலமாக இருக்கின்ற நடுவண் ஆட்சி பசுதானா தோலணிந்த புலியா என்னும்கோலத்தின் ஐயத்தைத் தீர்க்கும் வண்ணம் கோல்சாயா நடவடிக்கை எடுக்க வேண்டும்சீலமுடன் ஒற்றுமையாய் இந்தி யாவும் சிறப்புறவே நேயமுடன் வாழ வேண்டும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

