/
நெடும்பயணம் செல்லவேண்டும் நீதி தேடி நீதிக்கும் மக்கட்கும் ஆன தூரம்கடுந்துயரம் கொடுக்கின்ற தூர மாகும் காக்கவரும் கரங்களுக்குள் கொலைவா ளுண்டு.மடுவிற்கும் மலைக்குமான தூரஞ் சென்று மாநீதி பெறுவதற்கு முடிவ துண்டோ?கொடுமையிது நீதிபெறக் கால மானால் கூறிடலாம் மறுக்கப்பட்ட நீதி யென்றே!சிறைச்சாலை தவச்சாலை ஆகு மென்றால் செய்நீதி வரமெனலாம் ஆனால் இங்கோசிறைச்சாலை கொலைச்சாலை ஆன திங்கே, செய்வதறி யாதுநிற்கும் எளியோ ருக்குமுறைதவறும் நீதியெனில் ஏது நன்மை? முகத்தினிலே கட்டிநிற்கும் கருந்தி ரையோநெறிதவறும் நீதியினைக் குறிக்கு மன்றோ! நியாயமிதோ சாய்கின்ற துலாக்கோல் நன்றோ!மக்கட்குக் கிடைக்கின்ற நீதி என்றும் மாறாத தீர்ப்பாய்த்தான் இருக்க வேண்டும்.தக்கதொரு தருணத்தில் கிடைக்க வேண்டும். தருமத்தின் வழியிலது நிற்க வேண்டும்.மிக்கநல்ல நீதியாக விளங்க வேண்டும். மேதினிக்கோர் நல்லவழி காட்ட வேண்டும்.இக்கணமே இங்கெவர்க்கும் பொதுவாய் நீதி இறையாண்மை மேலோங்கச் சேர வேண்டும்.நீதியினை நாம்தேடிப் போகா வண்ணம் நீதிநம்மைத் தேடிவரும் நேர்மை செய்வோம்.பாதிவழி மாறிடாமல் பணத்தின் பின்னே பலவாக ஓடிடாமல் ஆய்ந்து பார்த்துவாதிக்கும் விவாதங்கள் தேர்ந்த றிந்து வழக்கதனை விரைவாக முடிக்க வேண்டும்.சாதிக்கும் நிலையாக நீதி வேண்டும். சமதர்மப் பாதையிலே ஓங்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

