நீதியைத் தேடி எங்கே செல்வது
திருதுராட்டிரனுக்கு கண் தரியவில்லை
என்பதற்காக தன் கண்ணையும்
மூடிக்கொண்டாள் உத்தமி காந்தாரி...
இங்கும் ஒருத்தி வௌ்ளைப்புடவை
கட்டிக் கொண்டு இடது கையில்
தராசையும் ஏந்திக் கொண்டு
கருப்புத் துணியால் கண்ணையும்
மூடிக்கொண்டு நின்றிருந்தாள்...
அவளும்!
இன்று அவிழ்க்கப்பட்ட சேலையோடு
தராசையும் தொலைத்துவிட்டு
கைகூப்பி நிற்கின்றாள் நீதி வேண்டி...
யாரும் வாயைத் திறக்கவில்லை
பல கிருட்டிணர்களும் கூட
கையை மூடிக்கொண்டு நிற்கின்றனர்...
நீதியரசரின் இருக்கைக்கு மேலே
பொக்கை வாயை பிளந்து கொண்டு
“வாய்மையே வெல்லும்”
என்று பொறுமையாய் தொங்கிக்
கொண்டிருந்தார் ஒருவர்...
அவரும் கைத்தடியை இழந்துவிட்டு
தள்ளாடி தள்ளாடி நிற்கின்றார்
சுதந்திரம் பெற்றுத்தந்த குற்றத்திற்காக
குற்றவாளிக் கூண்டில்...
வாதாட வந்த வக்கீல்களும்
வருமான மயக்கத்தில் வாயை மூடி
வாதாடுகின்றனர்...
தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம்
நீதியை நம் உள்ளத்திலும் இல்லத்திலும்
வன்முறைக் குற்றங்களை மூடி
மறைத்துக் கொண்டு...
இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றோம்
கிடைக்கப்பெறாத அரும்பெறும் நீதியை...
(உகும்... போலிப் புன்னகையோடு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

