தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நிழலில் தேடிய நிஜம்: கவி.சுசிமணாளன் 

Updated On :9 ஏப்ரல் 2018, 9:57 am

நிழலில் தேடிய நிஜம் இவர்  மாய 
உலகில் மூழ்குவர் நித்தம்...!

நித்தம் நித்தம் சித்தமெல்லாம்- நடிகனின் 
நினைப்போடிருப்பர் -சொந்த 
நிலை காணாது கனவில் திளைப்பார் 
தாய் தந்தை நலன் மறப்பர் காண்!

பக்கமிருக்கும் நண்பன் நேசம் மறப்பர் -ஆங்கே
பகலிரவு பாராது முகநூலில் நட்பு வளர்ப்பர் 
மிச்சமிருக்கும் நாணம் கூட விற்பார் -அவர் 
எச்சங்களை கடைப் பரப்பி விற்பார்!

முகம் புதைத்த முகநூல் கிரீச்சு -கெட்ட
அகம் தைத்த நட்பே கூடாது கேள் 
நித்தம் ஒரு புத்தகம் படி நாளும் 
சித்தம் தெளிவுற நூலைப் படி!

நிழலில் தேடிய நிஜம் நீ ஒருநாள் 
வெயிலில் காயும்போது உணர்வாய் 
நிதர்சனம் இதுவே கேளாய் நட்பே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.