பூ கண் சிமிட்டினால் வாசமே கணக்கு! !
மேகம் கண்சிமிட்டினால் மழையே கணக்கு!
நிலம் கண் சிமிட்டினால் விளைச்சலே கணக்கு !
மரம் கண் சிமிட்டினால் கனிகளே கணக்கு!
வானம் கண் சிமிட்டினால் நட்சத்திரங்களே கணக்கு!
சூரியன் கண்சிமிட்டினால் நேரமே கணக்கு !
இளமை கண்மிட்டினால் வாலிபமே கணக்கு!
முதுமை கண்சிமிட்டினால் தனிமையே கணக்கு!
குழந்தையே ‘நீ கண் சிமிட்டினால்’
தாய்க்கு அது என்ன கணக்கு. . .
கணக்கு அல்ல கவிதை
கவிதையல்ல உயிர்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.