நீ கண் சிமிட்டினால்: ஆர். அருண்குமார்


கவலைகள் தீரவே நான் வேண்டி
காலமெல்லாம் காத்திருக்கேன்.
கைகொடுப்பாய் நீயெனவே
கனா காண்கிறேன்.
ஒருமுறை தரிசனம் தந்தால்
ஒராயிரம் ஆண்டுகள் வாழ்வேன்.
தலைமுறை வாழ்ந்திடவே
தயவு செய்வாய் காவிரியே...!
விவசாயம் செழித்திடவும்
விளைச்சல் பெருகிடவும்
கண்சிமிட்டி கருணை காட்டு
கடவுளாய் தொழுதிடுவோம்.
பருவத்தே பயிர் செய்தால்தான்
பாதகமின்றி வாழலாம்.
தண்ணீரை தமிழகத்துக்கு
தந்திடுவாய் தர்மத்தாயே.
விவசாயி அழுகிறேன்
விரைவாக உதவிடுவாய்.
நீ கண் சிமிட்டினால்தான்
நிறைவான வாழ்வு எங்களுக்கு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...