2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

நீ கண் சிமிட்டினால்: இளவல் ஹரிஹரன்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 10:53 am

கவிதைமணி

கண்சிமிட்டும் காலமதும் நமக்கா யிங்குக்
      காத்திருக்கா தொருகணமும் கடந்து போகும்
மண்மீது மீண்டுமந்தத் தருணம் வாரா
      மனமேநீ இழந்ததைப்பெற வாய்ப்பே யில்லை.
எண்ணத்தால் இமயத்தைத் தொடலாம் ஆனால்
     எப்போதும் உன்கால்கள் பூமி யில்தாம்.
திண்ணமுடன் வெற்றியினை ஈட்டு தற்குச்
     செயலாலே முயன்றாலே சிறக்கு மன்றோ!

இளைஞரேஉம் கண்சிமிட்டல் கன்னிப் பெண்கள்
     இருக்கின்ற திசைநோக்கி இருப்ப தல்ல!
வளையவரும் வெற்றியெனும் திக்கை நோக்கி
     வளைத்துவிடக் கண்களுக்குக் கவனம் வேண்டும்
விளையாட்டாய்க் கண்சிமிட்டல்  இருக்க வேண்டாம்
     வினையாகும் முன்பதனை வேறுப டுத்தி
விளையவரும் இலக்கதனை நோக்கி இன்பம்
      விளைக்கின்ற கண்சிட்டாய் இருக்க வேண்டும்.

சிகரத்தைத் தொடுகின்ற வண்ணம் கண்கள்
       சிமிட்டல்கள் இருந்திட்டால் இமயம் கூட
நிகராகக் காலடியை முத்த மிட்டு
       நின்றுவிடும் வெற்றிக்கே இட்டுச் செல்லும்
முகராசி கூட்டுவிக்கும் முன்னேற் றத்தை
       முன்னாடி நிற்கவைக்கும் தலைமை யேற்கும்
புகழாரம் சூட்டிநிற்கும் புரியும் செய்கை
       புன்னகையில் கண்சிமிட்டிப் பார்க்கு மன்றோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.