தனிமையோடு பேசுங்கள்: கவிஞர் ராம்க்ருஷ்

Updated On :12 பிப்ரவரி 2018, 9:54 am

பேசுமொழி எங்கும் வீசுமொழி ஆகின்றதுகூசும் சொற்கள் வாய்வழித் தெறிக்கின்றனவீசும் தென்றலும் வெப்பத்தில் தகிக்கின்றதுஏசும் ஏச்சினால் தூயநட்பும் துடிக்கின்றதேதனிமைத் தவிப்பு துன்பம் தருகின்றதாகனிபோல இனிக்கும் தனியுடமை அதுசனிபோல குறுக்கே யாரும் வருவதில்லைபனிபோல துன்பங்கள் மறைக்கும் மருந்ததுதனிமையோடு விரும்பும் வண்ணம் பேசலாம்மனிதநேயத்தோடு விரும்பும் நம் பேச்சையதுபுனிதமான நட்பில் புல்லரித்துப் போகுமதுநுனியளவும் எதிர்ப்பில்லா பேசாமடந்தையதுபுயலும் சூறாவளியும்கூட கலைக்கமுடியாதுவயலும் வரப்பும்கூட துணைபுரியும் தனிமைக்குஅயலூர் உள்ளுர் என்ற பேதமில்லை அதற்குசுயமான சிந்தனையூற்றில் இனித்திடும் அதுபேசுங்கள் தனிமையோடு இனிமையாய் என்றும்தூசு என விரட்டுங்கள் சுய துன்பங்கள்தனைமாசுகள் மனம்விட்டுப் போகும் வெகு தூரமேவீசுதென்றலும் தனிமைக்கு இனிமை சேர்க்குமே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...