/
போர்க்களமாய் வாழ்க்கையது வான பின்பு புறமுதுகைக் காட்டாமல் எதிர்த்து நின்றுபார்க்கின்றோர் வியக்குவணம் வெற்றி யோன்றே பரிசாகப் பெறுகின்ற முனைப்பைக் காட்டிநேர்க்கோட்டில் பயணிக்கும் நெஞ்சங் கொண்டு நிலைமாறிப் போகாமல் வெல்ல வேண்டும்ஊர்ச்சபையின் நடுவினிலே நடந்தால் மாலை உயர்தோளில் விழவேண்டும் பெருமை கொண்டே.வாழ்க்கையென்றும் சோலைகாணும் வசந்த மல்ல. வழியெங்குந் தடைக்கற்கள் நிற்கும், மீறிச்சூழ்கின்ற தீவினைகள் நீங்கிச செல்ல தொடர்நாட்கள் இடரின்றி வாழ லாமே.ஆழ்மனதில் எப்போதும் அணையாத் தீயாய் அமைகின்ற தன்னம்பிக் கையைக் கொண்டுவீழ்ந்திடாது வெற்றியினைக் காண லாமே வெல்கின்ற மனப்பாங்கைப் பேண லாமே.பூக்களெலாம் முட்களோடு போராட் டங்கள் பொழுதெல்லாம் கண்டுவிட்டு மலரு மன்றோ.ஊக்கமதைக் கொண்டாலே ஊழை வெல்லும் உறுதியிங்கு கிடைக்குமென்ற மொழியி ருக்கத்தேக்கமின்றி வாழ்க்கையெனும் போர்க்க ளத்தைத் தெம்புடனே எதிர்கொள்ளும் உணர்வு தோன்றும்நோக்கமதே நம்வாழ்வில் நிறைய வேண்டும் நோகாமல் வெற்றிநமைச் சேரு மன்றோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

