/
அன்றொரு நாள் ஆணவம் கண் மறைக்க மனமாயை அறிவழிக்க, ஆலமர பிச்சை சாமியை செருக்கோடு முறைத்திருந்தேன், வந்திர்ரானுங்க ஊர ஏமாத்த என்று.மாறாத புன்னகையும்வாறாத கேசமும் -யாரையும்பாராத முகமென வீற்றிருந்த திருவோட்டு சாமி - எனை தீட்சண்யமாய் பார்த்தது.தாட்சண்யம் பாராமல் - சீ என்றேன்,விட்டு விடப் போகுதுயிர்,விட்டவுடன் உடலைச்சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார், என்று ஏதோ முனுமுனுக்க,அப்படியா என்றேன்,எப்படியோ அதை மறந்து, அன்றாட அலுவலில் எல்லாம் மறக்க,பிரிதொரு நாள் நண்பனுடன் வாகனத்தில் பின் இருக்கைப் பயணம்,கண் விழித் துப் பார்க்க,சுற்றிலும் மருத்துவ முகங்கள்,நீ அதிர்ஷ்டக்காரன் உன் நண்பன் ஸ்பாட் என்றனர்,எதிரே சுவற்றில் ஒருவரின் புகைப்படம் தெரிந்தது,அட நம்ம பிச்சை சாமி என்றெண்ணி யா ரிவர் என்றேன் ஆஸ்பத்திரி முதலாளி என்றதும்எங்கே அவர் என,எல்லாத்தையும் டிரஸ்டுக்கு அர்ப்பணிச்சிட்டு எங்கேயோ - போயிட்டாரு என்றார்,அடுத்த நாள் தெருக்கோடிக்கு விரைந்தேன்,வித்தாரமும் -கடம்பும் வேண்டாவாம் மடநெஞ்சே செத்தாரைப் போலத் திரி,என்றார் - பிச்சை - இல்லை இல்லை முதலாளி மெல்ல,எனது ஆணவமும் நானும் சாஷ்டாங்கமாய் விழுந்தோம் கீழே ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்! - பிரேமலதா விஜயகாந்த்

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

