ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்: அழகூர். அருண். ஞானசேகரன்

Updated On :3 ஜூன் 2018, 8:40 am
வாழ்க்கையெனும் போர்க்களத்தில் வீழ்ந்தவர்கள் கோடி      வகையாக வெற்றிதனைக் கண்டவர்கள் சிலரே!சூழ்கின்ற இடர்கள்தனை வெல்லும்திறன் வேண்டும்,      சூழ்ச்சிதனை முறியடிக்கும் மதியைகொள்ள வேண்டும்!வீழ்வதற்கோ நாம்பிறந்தோம், உறுதிகுலை யாமல்      வெல்வதுவே நோக்கமென்று துடித்தெழுதல் வேண்டும்!ஆழ்ந்திதனை சிந்தித்து வெல்வதுந்தன்  கடமை      அயர்ச்சிதனை கொண்டிட்டு ஓய்வதுவும் மடமை!ஊழ்வினைப் பயனெனன்று  ஓய்ந்தவர் வாழ்வினில்               உயர்வினைக் கண்டதில்லை,      உறங்கிக் களித்திட்டு பின்னர்நாம் வருந்தியும்               ஒன்றுமே நடப்பதில்லை!சூழ்ந்திட்ட துயர்கண்டும் கலங்கா திருப்பதே               சுகமதைக் காணும்வழி,       சோம்பலை வளர்த்தவர் பலனெனக் காண்பதும்               சோகத்தைத் தானல்லவோ?பாழ்பட்டு நின்றவர் இளமையில் சுகமாய்               பகலிலும் உறங்கியவர்,       பலனென பின்னாள் வாழ்வினில் கண்டதும்               பழியின்றி வேறொன்றில்லை!ஆழ்ந்திதை உணர்ந்திட்டு கருத்தினில் கொண்டவர்               அழிவுறக் கண்டதில்லை,       அனுதினம் வியர்வையை சிந்திட்டு உழைத்தவர்                அவலத்தை ஏற்றதில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.