அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

யார் இட்ட சாபம்: கவிதா வாணி

Updated On :21 மே 2018, 9:56 am

என்னுயிரே... 

ஆகாய மார்கத்தில் அனுதினமும்
வரிவடிவம் ஆனாலும் அவை யாவும் 
அலை அலையாய் நிலை மாறும். 

கணம் தோறும் நீரலைகள் - கண் முன்னே மறைந்தோடும்,  
காட்டாற்று வெள்ளமென நினைவெல்லாம் கலைந்தோட 
கார்முகிலாய்  நான் இருந்தால்.. கனவெல்லாம் உலராதே. 

தண்ணீரும் தனலாக, மண் வாசம் மனமெங்கும் - 
கரை மீது நான் இருக்க, கப்பலிலே நீ போக, 
காயாத கறையாக ஆறாத என் மனதில்

கூறாத வார்த்தைகளால் கூராக்கி தினமென்னை  
செல்களிலே சேகரித்த அன்பூற்றி அடுப்பூத,
அரா - கிரியாய் எரிந்திடுமே -மையல் எனும் வேள்வித் தீ.

ஆதிக்க கரத்தாலே சாதிக்க நினைத்தவரை - சாதியும் சுட்டு விட
கட்டவிழ்த்த பழ வினைகள்,
 
உன் ஆதிக்கத்தை அழித்துவிட்டு... 
சாபமதை சுட்டறுத்து,
சாம்பலில் பீனிக்ஸாய்,

சோம்பலின்றி வந்து விடு,
ஆம்பலுனைக் காத்திடுவேன் - 
அல்லி மனம் நோகாது. என்றபடி நானுறங்க
ஆதவனும் எனை எழுப்ப - 
அலுவலகம் செல்ல வேண்டும் - 
அரை நாளும் விடுப்பில்லை.

நானறியேன் ஏன் என்று, 
யார் இட்ட சாபமிது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.