/
நீர் நிலைகளில் அம்புலியைக் கண்டு ஆனந்தித்த நாட்கள் பொய்யாகி அவ்விடம் ஆரவாரமின்றி கல்சீட்டுக் கட்டுகளாக மாறியதே இது யார் இட்ட சாபம் ?மாற்றம் என்கிற பெயரில் தலை விரித்தாடும் அநாகரீகம் மக்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தினையும் மாசுபடுத்துகிறதே இது யார் இட்ட சாபம் ?சமுதாயத்தில் சுய ஒழுக்கம் கட்டுப்பாடு அனைத்துமே தேய்ந்துபோய் சுதந்திரம் என்னும் பெயரில் வன்புணர்வு அதிகரித்து உள்ளதே இது யார் இட்ட சாபம் ?கல்வியை வியாபாரமாக்கி பதின் அகவையரின் மருவற்ற கனவுகள் வேரோடு களைந்து எரியப் படுகிறதே இது யார் இட்ட சாபம் ?உண்ணும் உணவில் கலப்படம் உய்ய உதவும் மருந்தில் போலித்தனம் மித்திர உறவில் கபடத்தனம் திருமண பந்தத்தில் பிளவு இது யார் இட்ட சாபம் ?வான் பொய்த்தாலும் வருடம் பொய்க்காமல்ருது தோறும் சிரம் மழித்து நிற்கும் விருட்சங்களே சமுதாயத்தை சீர்திருத்த நீங்கள் மேற்கொண்டவேண்டுதலின் வரப்பிரசாதமா ? உங்களின் வேண்டுதல் நனவாகட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

