20. செத்தையேன் சிதம்பன் - பாடல் 7

எனது பழ வினைகள், படைகள் போல எனது அருகில் வந்து நின்று, இடைவிடாமல் எனது உடலையும் உயிரையும், துன்புறுத்துகின்றன. அதனால் கோவல் வீரட்டத்து

Updated On :9 ஏப்ரல் 2016, 11:09 am

பாடல் 7

படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும்
விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும்
இடையிலேன் என் செய்கேன் நான் இரப்பவர் தங்கட்கு என்றும்
கொடையிலேன் கொள்வதே நான் கோவல் வீரட்டனீரே

விளக்கம்

பழைய வினைகள் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாக இருக்கும் தன்மை குறித்து, அப்பர் பிரான் இந்த பாடலில் படைகள்போல் என்று குறிப்பிடுகின்றார். வாள், அம்பு, ஈட்டி, கத்தி, சூலம் ஆகிய எந்த படையாயினும் உடலுக்கு வருத்தம் தருவது போன்று, பழைய வினைகள் தனது உயிருக்கும் உடலுக்கும் துன்பங்கள் விளைவிக்கின்றன என்றும் கூறுகின்றார்.

பொழிப்புரை

எனது பழ வினைகள், படைகள் போல எனது அருகில் வந்து நின்று, இடைவிடாமல் எனது உடலையும் உயிரையும், துன்புறுத்துகின்றன. அதனால் கோவல் வீரட்டத்து விகிர்தனை விருப்பத்துடன் வணங்கித் தொழவும் நேரம் இல்லாமல் தவிக்கின்றேன். என்னிடம் வந்து இரப்பவர்களுக்கு, அவர்களுக்கு வேண்டிய பொருளை அளிக்காத உலோபியாக வாழ்ந்த நான், மற்றவர்கள் அளிக்கும் கொடையினை ஏற்றுக் கொண்டு அவல வாழ்க்கை வாழ்கின்றேன். கோவல் வீரட்டத்து உறையும் இறைவனே நீர் தான், என்னை வருத்தும் வினைகளிலிருந்து விடுவித்து, உம்மை வணங்கித் தொழும் நிலைக்கு என்னை ஆளாக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.