22. கடவுளைக் கடலுள் எழு - பாடல் 3

பெருமை உடையவனும், ஒவ்வொரு உயிரினுள்ளும் தனித்தனியாக கலந்து இருப்பவனும், விண்ணோர்கள் அறிய

Updated On :19 ஏப்ரல் 2016, 7:19 am

பாடல் 3

ஏறு ஒப்பானை எல்லா உயிர்க்கும் இறை
வேறு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
ஆறு ஒப்பானை அரத்துறை மேவிய
ஊறு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே

விளக்கம்

ஏறு = பெருமை. வேறு ஒப்பான் = ஒவ்வொரு உயிருக்கும் தனியாக அந்த உயிருடன் கலந்து இருக்கும் தன்மை. ஆற்றினில் குளிப்பவர்கள் புறத் தூய்மை அடைவதுடன், அவர்களது உள்ளமும் குளிக்கும் சமயத்தில் இன்பம் அடைகின்றது. அதுபோன்று, தன்னை நினைத்து வழிபடும் அடியார்களின் மாசுகளைக் களைந்து, அவர்களது மனத்தினை தூய்மை செய்பவன் இறைவன். மேலும் இறையுணர்வில் திளைக்கும் அடியார்களின் மனமும் இன்பம் அடைகின்றது. எனவே, ஆற்றுக்கு இறைவனை இங்கே ஒப்பிடுகின்றார். ஊறு = அருள் ஊற்று.

பொழிப்புரை

பெருமை உடையவனும், ஒவ்வொரு உயிரினுள்ளும் தனித்தனியாக கலந்து இருப்பவனும், விண்ணோர்கள் அறிய முடியாதவனும், தன்னில் குளிப்போரின் உடலை தூய்மை செய்தும் அவர்கள் குளிக்கும் சமயத்தில் ஆனந்தம் அளிக்கும் ஆறு போன்று, தன்னை உணர்ந்து வழிபடும் அடியார்களின் மனதினை தூய்மைப்படுத்தி, அவர்கள் இறையுணர்வுடன் திளைக்கும் சமயங்களில் அவர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பவனும், அரத்துறை தலத்தில் உறைபவனும், தங்களது அறியாமையை நீக்கிகொண்டு மெய்ப்பொருளை உணரும் அடியார்களின் மனதினில் ஊற்று போன்று ஊறி பெருக்கெடுப்பவனும் ஆகிய இறைவனை காணுங்கள். அவனைத்தான் நாம் தொழுகின்றோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.