பாடல் 8
விண் நிறைந்ததோர் வெவ்வழலின் உரு
எண் நிறைந்த இருவர்க்கு அறிவொணா
கண் நிறைந்த கடி பொழில் அம்பலத்து
உள் நிறைந்து ஆடும் ஒருவனே

விளக்கம்

ஒரு முறை, பிரமனுக்கும் திருமாலுக்கும் இடையே தங்களுக்குள், யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்தது. இருவரும் தாங்களே மற்றவரை விட பெரியவர் என்று சொல்ல, வாக்குவாதம் முற்றியது. அப்போது அவர்களின் பேதமையை நீக்கும் பொருட்டு அவர்கள் முன்னே சிவபெருமான் பெரும் அனல் பிழம்பாய் காட்சி தந்தார். விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பரந்து நின்ற சோதியின், அடியையும் முடியையும் எவர் அறிகின்ராரோ அவரே பெரியவர் என்று அவர்கள் ஒப்புக்கொள்ள, பிரமன் அன்னம் வடிவம் எடுத்து முடியைக் காண பறந்தான்; திருமால் பன்றி வடிவம் எடுத்து, பூமியை ஆழ்ந்துகொண்டு கீழே சென்றார். ஆனால் இருவரும் தங்கள் முயற்சியில் தோல்வி அடைந்தனர். இந்த நிகழ்ச்சி பல திருமுறைப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் திருமந்திரப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பேதமை என்று அவர்களது அறிவற்ற செயல் உணர்த்தப்பட்டுள்ளது.

பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்
பிரமன் மால் தங்கள் தம் பேதமையாலே
பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க
அரனடி தேடி அரற்றி நின்றாரே

பிரமனும் திருமாலும் மாறுபட்டு தங்களுக்குள் வாதம் செய்த தகவல் திருவாசகம் தோள்நோக்கம் பதிகத்திலும் கூறப்பட்டுள்ளது. இறந்து என்றால் கடந்து என்று பொருள். அளவு கடந்து நின்ற தன்மை இங்கே உணர்த்தப்பட்டுள்ளது.

பிரமன் அரி என்று இருவரும் தம் பேதமையால்
பரமம் யாம் பரம் என்று அவர்கள் பதைப்பொடுங்க
அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ

அப்பர் பிரான் பிரமன் திருமால் இருவரையும் எண் நிறைந்த இருவர் என்று இங்கே குறிப்பிடுகின்றார். அவர்களது இருவரின் மனத்திலும், அடியையும் முடியையும் காண முடியும் என்ற செருக்கு நிறைந்திருந்த தன்மையை இதன்மூலம் உணர்த்துகின்றார். ஆனால் அன்பு நிறைந்த உள்ளத்தோடு வழிபட்ட, வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர்களுக்கு, இந்த தலத்தில் தான் இறைவன் தனது நடனக் காட்சியை அருளினார். அவர்கள் கண்ட நடனக் காட்சியின் ஒரு பகுதியைத் தான் நாம் இன்று தில்லையில் காண்கின்றோம். இந்த பாடல் மூலம் நாம் சிவபிரானை எவ்வாறு அணுக வேண்டும் என்று உணர்த்தப்படுகின்றது.

மணிவாசகரும் தனது சிவபுராணம் அகவலில், விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந்து எல்லை இல்லாதானே என்று குறிப்பிடுவது இங்கே உணரத்தக்கது. நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவன் சிவபிரான் என்ற செய்தி இங்கே கூறப்படுகின்றது.

பொழிப்புரை

ஆகாயம் அளாவி எழுந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும், திருமாலும் பிரமனும், காணமுடியாதபடி, சோதியாக எழுந்தவனே, உனது அடியார்களாகிய பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர்களுக்கு, அவர்களது உள்ளமும் கண்ணும் நிறையும்படி, பொழில்கள் சூழ்ந்த தில்லைச் சிற்றம்பலத்தில் உனது நடனக் காட்சியை காட்டி அருளிய ஒப்பற்றவனே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு!

சைக்கிளில் விஜய்! துரத்திய ரசிகர்கள், பாதுகாவலர்கள்!

விஜய்யின் வருகை தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: சிபிஎம் எம்.ஏ.பேபி
தவெக நிர்வாகி அஜிதா திமுகவில் இணைந்தார்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு