ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

27. நன்று நாள் தொறும் - பாடல் 1

தில்லைத் தலத்தில், கூத்த பிரானின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான் பல பதிகங்கள் பாடியும் உழவாரப் திருப்பணிகள் செய்தவாறும் அங்கே இருந்த நாட்களில்,

Updated On :6 ஜூன் 2016, 9:31 am

(வேட்களம் – குறுந்தொகை)

முன்னுரை

தில்லைத் தலத்தில், கூத்த பிரானின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான் பல பதிகங்கள் பாடியும் உழவாரப் திருப்பணிகள் செய்தவாறும் அங்கே இருந்த நாட்களில், இடையே வேட்களம் மற்றும் கழிப்பாலை தலங்கள் சென்று பதிகங்கள் அருளியதாக பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். காவியங்கண்டர் = நீல மலர் போன்ற நிறத்தில் அமைந்த கழுத்தினை உடைய சிவபெருமான். இந்த உலகத்தில் உள்ளவர்கள் உய்வதற்காக அப்பர் பிரான் பதிகங்கள் அருளினார் என்பதை உணர்த்தும் பொருட்டு, மண்ணோர் வாழ நண்ணினார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

மேவிய பணிகள் செய்து விளங்குநாள் வேட்களத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச் சென்று முன் வணங்கிப் பாடிக்
காவியங்கண்டர் மன்னும் திருக்கழிப்பாலை தன்னில்
நாவினுக்கரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ

பாடல் 1

நன்று நாள் தொறும் நம் வினை போய் அறும்
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
சென்று நீர் திருவேட்களத்து உள்ளுறை
துன்று பொற்சடையானைத் தொழுமினே

விளக்கம்

துன்று = நெருங்கிய, அடர்ந்த.

பொழிப்புரை

திருவேட்களம் சென்று அங்கே உறைகின்ற இறைவனை, அடர்ந்ததும் பொன் போன்ற நிறத்தில் உள்ளதும் ஆகிய சடையை உடைய பெருமானை, நீங்கள் தொழுவீர்களாக. அவ்வாறு தொழுதால், உங்களுக்கு நாள்தோறும் நன்மையே உண்டாகும்; மேலும் உங்களது வினைகள் அறுந்து தொலையும்; உங்களது வாழ்வினில் என்றும் இன்பம் தழைக்க நீங்கள் வாழ்வினில் உய்வினை அடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.