ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

27. நன்று நாள் தொறும் - பாடல் 6

உலக மாந்தர்களே, உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாச பந்தங்களால், பலவிதமான செயல்களில் ஈடுபட்டு வேதனையில் ஆழ்கின்றீர்கள்; மேலும் உங்களது வினைகளையும் பெருக்கிக்கொள்கின்றீர்கள்;

Updated On :9 ஜூன் 2016, 7:17 am

பாடல் 6

கட்டப்பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம் நீர்
சிட்டனார் திருவேட்களம் கை தொழ
பட்ட வல்வினை ஆயின பாறுமே

விளக்கம்

பொட்ட = விரைவாக. உடலினை விட்டு உயிர் பிரியும் தருணம் எது என்பதை நாம் எவரும் முன்னரே அறியமுடியாது. ஒரு சிலருக்கு தங்களது உயிர் பிரியும் தருணம் நெருங்கிவிட்டது என்ற உணர்வு தோன்றினாலும், அவர்கள் ஏதேனும் செயல்பட நினைக்கும் முன்னமே உயிர் பிரிந்துவிடும் என்பதை உணர்த்த, விரைவாக உயிர் பிரியும் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பாறுதல் = அழிதல்.

பொழிப்புரை

உலக மாந்தர்களே, உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாச பந்தங்களால், பலவிதமான செயல்களில் ஈடுபட்டு வேதனையில் ஆழ்கின்றீர்கள்; மேலும் உங்களது வினைகளையும் பெருக்கிக்கொள்கின்றீர்கள்; பல செயல்களையும் செய்யும் வல்லமை வாய்ந்த உயிர், தனது வினைகளைக் கழித்துக்கொள்ள ஏதேனும் செய்ய நினைக்கும் முன்னர், விரைவாக உயிர் உடலிலிருந்து பிரிந்துவிடும். எனவே நம்மால் அந்த தருணத்தில் நமது வினைகளைப் போக்கிக்கொள்ள ஏதும் செய்ய முடியாது. இந்த நிலையை நினைத்து நீங்கள் கவலையில் ஆழாமல், உங்களது உயிர் பிரியும் முன்னரே, இப்பொழுதே, உயர்ந்த இறைவனாகிய சிவபெருமான் வாழும் திருவேட்களம் சென்று, அவனை வணங்கித் தொழுவீர்களாக. இவ்வாறு செய்தால், உமது உயிருடன் பொருந்தியுள்ள வலிமை வாய்ந்த வினைகள் அனைத்தும் அழிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.