ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

26. அன்னம் பாலிக்கும் - பாடல் 3

சென்ற பிறவிகளில் நாம் செய்த நற்செயல்களால் (புண்ணியங்கள்) விளைவது நல்வினை; முன்னர் நாம் செய்த தீய செயல்களால் விளைவது

Updated On :27 மே 2016, 11:14 am

பாடல் 3

அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்
எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர்
சிரிச்சுற்றுப் பல பேசப்படா முனம்
திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே

விளக்கம்

அரிச்சுற்ற வினை = சுற்றிலும் நம்மை சூழ்ந்துகொண்டு நம்மை அரித்துத் தின்னும் வினை. எரிச் சுற்றப்பட = நெருப்பால் சூழப்பட்டு, இறந்த பின்னர் நமது உடலை சுடுகாட்டில் இட்டு எரிக்கும் நேரம். சிரிச்சுற்று = சிரித்து. அரித்து, சிரித்து என்ற சொற்கள் அரிச்சு, சிரிச்சு என்று மருவின.

சென்ற பிறவிகளில் நாம் செய்த நற்செயல்களால் (புண்ணியங்கள்) விளைவது நல்வினை; முன்னர் நாம் செய்த தீய செயல்களால் விளைவது தீவினைகள். இந்த இரண்டு வினைகளும் நம்மையும், நமது உடல் உறுப்புகளையும் பலவிதமாக ஆட்டிப்படைத்து, நாம் மேலும் வினைகளைப் பெருக்கிக்கொள்ளக்கூடிய நிலையினை ஏற்படுத்துகின்றன. இந்த வினைகள் ஏற்படுத்தும் மாற்றங்கள், தொடர்ந்து ஏற்படுவதால், வினைகள் நமது உடல் உறுப்புகளை பாதிப்பதன் மூலம் உயிரை அரித்து, உயிர் பிறவிக் கடலிலிருந்து மீளாமல் இருக்குமாறு செய்கின்றன. இதே செய்தியை, அப்பர் பிரான் பொய்ம்மாயப் பெருங்கடலில் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலிலும் குறிப்பிடுகின்றார். வினைகள் மற்றவர்களின் உடலை அரித்துத் தின்பதைப் போல், தன்னை ஒன்றும் செய்யமுடியாது என்று மிகவும் பெருமிதமாக கூறுகின்றார்.

பொய்ம்மாயப் பெருங்கடலில் புலம்பா நின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே கிடந்தது
தான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண் நல் ஆரூர்த் தடங்கடலைத் தொடர்ந்தோரை அடங்கச் செய்யும்
எம்மான் தன் அடித் தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே

இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் கூறும் அப்பர் பிரான், தான் எதற்காக இந்த மனிதப் பிறவி வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக அந்த பாடலில் கூறியுள்ளார். தில்லைச் சிற்றம்பலவனைக் கண்டு, அவன் மீது தான் கொண்டுள்ள அன்பினை மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இவ்வாறு கூறுகின்றார். இதன் மூலம் நாம் எடுத்துள்ள மனிதப் பிறவியின் பயனை நாம் முழுவதுமாக அடைய வேண்டும் என்றால் தில்லைக் கூத்தனை, நேரில் கண்டு வணங்கவேண்டும் என்ற செய்தியினை அவர் நமக்கு உணர்த்துகின்றார்.

ஒருவர் இறந்த பின்னர், அவரது உடலைக் காண வரும் சுற்றத்தாரும், நண்பர்களும் இறந்தவர், தனது வாழ்நாளில் செய்த செயல்களை (நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள், செய்யத் தவறிய செயல்கள்) விமர்சனம் செய்வதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். தில்லைக் கூத்தனை தரிசிக்காததால், தான் மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கத்தினை நிறைவேற்றாத எவரேனும் இறந்தால், அவரது உடலைக் காண வருவோர், மிகவும் இகழ்ச்சியாக, அவர் செய்யத் தவறிய செயலை, (அதாவது தில்லைக் கூத்தனை தரிசித்து பிறவிப் பயனை அடையாத நிலையை), சுட்டிக்காட்டி சிரிப்பார்கள் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். மனிதனாகப் பிறந்த நமக்குத் தானே தில்லை மாநகர் சென்று இறைவனைக் கண்டுத் தொழக்கூடிய வாய்ப்பு உள்ளது.

பொழிப்புரை

வாழ்நாள் முழுவதும், நல்வினை மற்றும் தீவினைகளின், மாயையில் சிக்குண்டு, தில்லை சென்று இறைவனை தரிசிப்பதன் மூலம் தான் பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து உய்யலாம் என்பதை உணராமல், இறுதி வரை தில்லை செல்லாமல் தனது வாழ்நாளை வீணாக்கி விட்டாரே என்று அயலவர், நமது இறந்த உடலைக் கண்டு இகழ்வாகப் பேசுவதன் முன்னர், தில்லைச் சிற்றம்பலவனைக் கண்டு தொழுது நீங்கள் உய்வினை அடைவீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.